TNPSC Group 4 ரிசல்ட் எப்பொழுது? எதிர்பார்ப்பில் தேர்வர்கள்! - விடை கிடைக்குமா?

TNPSC Group 4 ரிசல்ட் எப்பொழுது? எதிர்பார்ப்பில் தேர்வர்கள்! - விடை கிடைக்குமா?



தமிழகத்தை பொறுத்தவரை போட்டி தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், கடந்த 6 மாதங்களுக்கு மேலாகியும் TNPSC Group 4 ரிசல்ட் வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

TNPSC Group 4 ரிசல்ட் எப்பொழுது?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4 தேர்வுகள் கடந்த ஆண்டு, ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் மூலம் வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வை 14 லட்சதிற்கும் மேற்பட்டவர்கள் எழுதி உள்ளனர்.

முதலில் தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின் நடந்த பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு காரணமாக முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டு குரூப் 4 க்கு முன் நடைபெற்ற குரூப் 2 முடிவுகள் வெளியானது. அப்போது டிசம்பரில் குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இன்று வரையும் இந்த தேர்வு முடிவுகள் வெளியாக வில்லை. இந்த நிலையில், தேர்வர்கள் அனைவரும் விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் இது குறித்த எந்த வித தகவலும் வராததால் தேர்வர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

Post a Comment

0 Comments