TET தேர்வு எதிரொலி - TNOU பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது!

தமிழகத்தில் பட்டதாரிகளுக்கான தாள் இரண்டு ஆசிரியர் தகுதி தேர்வை முன்னிட்டு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மே மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வுகள்:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான TET Paper – 2 தேர்வு தொடங்கியது. இந்த தேர்வானது பிப். 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Tnou தேர்வுகள் ஒத்தி வைப்பு:

இந்த தேர்வு நடைபெறும் நாளன்று தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வும் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் TET தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு தேர்வுகளையும் எழுத முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் டெட் தேர்வை எழுத ஏதுவாக TET தேர்வு அன்று நடைபெறவிருந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த பல்கலைக்கழக பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு மே 6 மற்றும் 7ஆம் தேதி நடைபெறும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

Post a Comment

0 Comments