Daily TN Study Materials & Question Papers,Educational News

பூச்செடிகளில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க இதை மட்டும் செய்யுங்க போதும்!

பூச்செடிகளில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க இதை மட்டும் செய்யுங்க போதும்!

இன்றைய கால கட்டத்தில் அனைவருமே தாவரங்கள் வளர்ப்பதில் அதிக  ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பூச்செடிகள் வளர்பதில் அதிக அளவு ஆர்வம் கொண்டுள்ளனர். அப்படி பூச்செடிகள் வளர்ப்பவர்கள் அனைவருமே கூறுவது நான் எனது செடிகளை நன்றாக தான் பராமரித்து கொள்கின்றேன்.

Poo Sedigalil Pookal Athigam Pooka Tips in Tamil

Poo Sedigalil Pookal Athigam Pooka Tips in Tamil

ஆனால் எனது பூச்செடிகளில் அதிக அளவு பூக்களே பூக்கவில்லை என்பது தான். அப்படி கவலைப்படுபவர்களுக்காக தான் இன்றைய பதிவில் பூச்செடிகளில் அதிக அளவு பூக்கள் பூக்க சில குறிப்புகள் பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

பூச்செடிகளில் அதிக அளவு பூக்களே பூக்க வைக்கும் குறிப்புகள் பற்றி விரிவாக காணலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. வாழைப் பழத்தோல்- 4
  2. முட்டை ஓடு – 5
  3. எப்சோம் உப்பு – 1 டீஸ்பூன் 
  4. தண்ணீர் – 5 லிட்டர் 

வாழைப்பழ தோலினை காய வைக்கவும்:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 4 வாழைப் பழ தோல்களையும் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி காய வைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து வைத்து கொள்ளுங்கள்.

முட்டை ஓட்டினை அரைக்கவும்:

அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள 5 முட்டை ஓடுகளையும் நிழலில் காய வைத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து வைத்து கொள்ளுங்கள்.

எப்சோம் உப்புடன் கலந்து கொள்ளவும்:

ஒரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் எப்சோம் உப்பினை சேர்த்து அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் வாழைப்பழத்தோல் பொடி மற்றும் 1 டீஸ்பூன் முட்டை ஓடு பொடி இரண்டினையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

தண்ணீருடன் கலக்கவும்:

பின்னர் நாம் எடுத்து வைத்துள்ள 5 லிட்டர் தண்ணீருடன் நாம் கலந்து வைத்துள்ள எப்சோம் உப்பு , வாழைப்பழத்தோல் பொடி மற்றும் முட்டை ஓடு பொடி  கலவையை சேர்த்து நன்கு கலந்து 1 மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள்.

பின்னர் இதனை எடுத்து உங்களின் பூச்செடிகளின் வேர்களில் ஊற்றுங்கள். இதனை வாரத்திற்கு இருமுறை என்று தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் பூச்செடிகளில் கொத்து கொத்தாக பூக்கள் பூப்பதை நீங்களே காணலாம்.

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support