இரட்டுற மொழிதல் - 10th Tamil - Irattura Mozhihal

இரட்டுற மொழிதல் 

- சந்தக்கவிமணி தமிழழகனார



நுழையும் முன்:

விண்ணோடும் முகிலோடும் உடுக்களோ டும் கதிரவனோ டும் கடலோ டும் தமிழ் இணைத்துப் பேசப்படுகிறது. இவற்றுக்குள்ள ஆற்றலும் விரிவும் ஆழமும் பயனும் தமிழுக்கும் உண்டு எனப் போற்றப்படுகிறது. தமிழ் கடலோடு ஒத்திருத்தலை இரட்டுற மொழிவதன் மூலம் அறிகையில் அதன் பெருமை ஆழப்படுகிறது; விரிவுபடுகிறது.

ஆழக்கு இணை

முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

மெத்த வணிகலமும் மேவலால் -நித்தம்

அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு

இணைகிடந்த தேதமிழ் ஈண்டு

- தனிப்பாடல் திரட்டு

சொல்லும் பொருளும்

துய்ப்பது – கற்பது, தருதல்

மேவலால் – பொருந்துதலால், பெறுதலால்

பாடலின் பொருள்

தமிழ்: தமிழ், இயல் இசை நாடகம் எனமுத்தமிழாய் வளர்ந்தது; முதல் இடை கடைஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது;ஐம்பெருங்கா ப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது; சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

கடல்: க ட ல், முத்தினையும் அமிழ்தினையும் தரு கிறது ; வெண்சங் கு ,சலஞ்சலம், பாஞ்சசன்ய ம் ஆகிய மூன்று வகையான சங் குகளை த் தருகிறது; மிகுதியானவணிகக் கப்பல்கள் செல்லும்ப டி இருக்கிறது;தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது.




Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...