11th tamil Important 2 marks - Public Exam 2023 ( உரைநடை )

11th tamil Important 2 marks - Public Exam 2023 ( உரைநடை )

1. பேச்சுமொழி எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?

  • எழுத்தை மனிதனின் கை எழுதினாலும், அந்த எழுத்தின் உணர்ச்சியை முகத்திலுள்ள வாயினால் மட்டுமே வெளிப் படுத்த முடியும். அதனால் எழுத்துமொழியைவிடவும் பேச்சுமொழிக்கு ஆற்றல் அதிகம் உள்ளது.
  • எனவே, எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சுமொழி, உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது

2. தமிழ்நாட்டின் மாநில மரம் – சிறு குறிப்பு வரைக.

  •  தமிழ்நாட்டின் மாநில மரம் பனை.
  • இது, ஏழைகளின் கற்பக விருட்சம்.
  • சிறந்த காற்றுத் தடுப்பான்.
  • ஆழத்தில் நீர்மட்டம் குறையாமல் நீரைச் சேமித்து வைக்கும் தன்மையுடையது.

3. ‘கோட்டை’ என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?

  • ‘தமிழ் -கோட்டை 
  • மலையாளம் - கோட்ட, கோடு, 
  • கன்னடா - கோட்டே, கோண்டே,
  • துளு -கோட்டே
  • தோடா -  க்வாட் எனத் திராவிட மொழிகளில் எடுத்தாளப்படுகிறது

4. உ.வே.சா. அவர்கள் பயின்ற கல்விமுறை குறித்துக் குறிப்பு வரைக.

  • இக்கல்விமுறை, தனிநிலையில் புலவர்களிடத்துக் கற்கும் உயர்நிலைக் கல்விமுறையாகும்.
  • மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம், உ.வே.சா. பாடம் பயின்றமுறை இம்முறையாகும்.

5. ஆனந்தரங்கரின் வருணனைத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

  • கப்பல்கள் வருகின்ற செய்தியைக் கேட்டதும், நஷ்டப்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற்போலவும்,
  • மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்ததுபோலவும்
  • நீண்டநாள் தவமிருந்து புத்திரப் பாக்கியம் கிட்டினாற்போலவும்,
  • தேவாமிர்தத்தைச் சுவைத்தது போலவும் மக்கள் சந்தோஷப்பட்டார்கள் எனப் பதிவு செய்துள்ளார்.
  • இதனை ஆனந்தரங்கரின் வருணனைத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

6. இந்தியக் கட்டடக் கலையின் மூன்று வகைகள் யாவை?

  • நாகரம் ,
  • வேசரம் ,
  •  திராவிடம் 

7. ‘நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல்’ என்னும் உவமையை ஜீவானந்தம் வாழ்வுடன் ஒப்பிடுக.

  • வாண வேடிக்கைக்காரன் நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல்’ என்னும் உவமை ஜீவானந்தத்தின் மேடைப்பேச்சின் சிறப்பை விளக்குகிறது. சில கருத்துகளை விரிவாகக் கூறிப் புரிய வைத்தால் போதும் என்பதே அவர் எண்ணம்.
  • எனவே, இரண்டு கைப்பிடி விசயத்துடன் மேடை ஏறுவார். வெடிமருந்துக்கு நெருப்பு வைத்ததும், பச்சை, மஞ்சள், சிவப்பு எனக் குடைகுடையாய் உதிர்வதுபோல, மாலை மாலையாய் இறங்கி வரும் கருத்து வண்ணஜாலம் அறிந்தவர் ஜீவா என்பதைத் தெளிவுபடுத்த, இவ் வமை கூறப்பட்டுள்ளது.

8. நாட்டுப்புறத்திலும் பட்டணத்திலும் சிறந்து விளங்குவதாகத் தாகூர் எவற்றைக் கூறுகிறார்?.

  • நாட்டுப்புறங்களில் இருக்கும்போது, இயற்கையே சிறந்து விளங்குகிறது.

  • பட்டணத்திலோ, மனித சமுதாயமே முக்கியமானதாகத் தலைதூக்கி நிற்கிறது.

Post a Comment

1 Comments

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.