மெயின் வில்லன் சிம்பு? தளபதி 67 ப்ரோமோவில் சிம்பு.. அப்போ அவரு தான் மெயின் வில்லனா?:

 தளபதி 67 ப்ரோமோவில் சிம்பு.. அப்போ அவரு தான் மெயின் வில்லனா?: எகிறும் எதிர்பார்ப்பு... உண்மை என்ன?

சென்னை: விஜய் நடிப்பில் பொங்கல் ரேஸில் களமிறங்கிய வாரிசு, உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிட்டது.

வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார்.

விக்ரம் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு லோகேஷ் சினிமாட்டிக் கான்செப்ட்டில் உருவாகும் தளபதி 67 மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்

வாரிசு திரைப்படம் மூலம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த விஜய் அடுத்து தளபதி 67 ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். எப்போதும் ஒரு படம் வெளியானதும் வெளிநாடு டூர் சென்று வந்த பிறகே அடுத்தப் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பது விஜய்யின் வழக்கம். ஆனால், தளபதி 67 படத்திற்காக மொத்தமாக கால்ஷீட் கொடுத்ததோடு, படப்பிடிப்பிலும் உடனடியாக கலந்துகொண்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். ஆனாலும் தற்போது வரை தளபதி 67 படம் பற்றிய அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

பிப்ரவரி முதல் வாரத்தில் அப்டேட்

லோகேஷ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றிப் பெற்றது. இதனால் இனிமேல் என் படங்களில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் இருக்கும் என லோகேஷ் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் தளபதி 67 படமும் LCU கான்செப்ட்டில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் இன்னும் தாறுமாறான எதிர்பார்ப்பில் உள்ளது தளபதி 67. இந்நிலையில் இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட் பிப்ரவரி 1 முதல் 3ம் தேதிக்குள் வெளியாகும் என லோகேஷ் தெரிவித்துள்ளார்.

விஜய்யுடன் மோதும் பலமான கூட்டணி

இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் வில்லன்களாக அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், இயக்குநர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் ஆகியோர் கமிட் ஆகியுள்ளார்களாம். சில தினங்களுக்கு முன்னர் தளபதி 67 ஷூட்டிங்கில் கலந்துகொண்டதை உறுதி செய்திருந்தார் மிஷ்கின். அதேபோல் இரு தினங்களுக்கு முன் தளபதி 67ல் நடிக்கும் அர்ஜுனின் கெட்டப்பும் வெளியாகி வைரலானது. இதனிடையே தளபதி 67 அப்டேட்டை விக்ரம் படத்துக்காக எடுக்கப்பட்ட டைட்டில் ப்ரோமோ மாதிரி வெளியிட லோகேஷ் முடிவு செய்துள்ளாராம்.

மெயின் வில்லன் சிம்பு?

சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் கெளதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் தவிர இன்னொரு மெயின் வில்லன் படத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கேரக்டரில் நடிக்க முதலில் விஷாலுடன் லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்திய செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்நிலையில் சமீபத்தில் கிடைத்த தகவலின் படி சிம்பு தான் மெயின் வில்லனாக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. பத்து தல சூட்டிங் முடித்துவிட்ட சிம்பு, அவரது அடுத்தப் படம் குறித்து அறிவிக்காமல் சைலண்டாக இருக்கிறார். இதனால் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தளபதி 67 ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இது ஆதாரமற்ற தகவல் என்றும், சிம்பு தளபதி 67ல் நடிக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. விஜய்யின் வாரிசு படத்தில் 'தீ தளபதி' என்ற பாடலை சிம்பு பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...