பிப்ரவரி மாத ராசி பலன் 2023: அதிர்ஷ்ட மழை..3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அடிக்கப்போகும் ஜாக்பாட்

 பிப்ரவரி மாத ராசி பலன் 2023: அதிர்ஷ்ட மழை..3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அடிக்கப்போகும் ஜாக்பாட்

நவ கிரகங்களின் பார்வை பயணங்களால் மூன்று ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது.

 பிப்ரவரி மாதத்தில் மூன்று ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது. 2023ஆம் ஆண்டின் இரண்டாவது மாதம் பிப்ரவரி மாதம். இந்த மாதத்தில் நவ கிரகங்களின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு நன்மையைத் தரும், சில ராசிக்காரர்களுக்கு திடீர் திருப்புமுனையை ஏற்படுத்தும். சனியின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். பிப்ரவரி மாதத்தில் சூரிய பகவான் மகர ராசியில் பாதி நாட்களும் கும்ப ராசியில் 15 நாட்களும் பயணம் செய்வார். சுக்கிரன் கும்ப ராசியிலும் 15ஆம் தேதிக்கு மேல் மீன ராசியில் உச்சம் பெற்றும் பயணம் செய்வார். புதன் மகர ராசியிலும் மாத இறுதியில் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். செவ்வாய் மாதம் முழுவதும் ரிஷப ராசியில் பயணம் செய்வார். இந்த கிரகங்களின் பயணத்தால் துலாம், விருச்சிகம், தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
துலாம்

துலாம் ராசியில் வீட்டில் கேது, மூன்றாம் வீட்டில் புதன் நான்காம் வீட்டில் சூரியன், ஐந்தாம் வீட்டில் சனி, ஆறாம் வீட்டில் குரு, ஏழாம் வீட்டில் ராகு எட்டாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த மாதம் வேலையில் மாற்றங்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. வேலைப்பளு அதிகரிக்கும். அறிவும் திறமையும் அதிகரிக்கும். வேலையில் புரமோசன், பதவி உயர்வு தேடி வரும். குடும்பத்துடன் சிறு பயணங்கள் செல்வீர்கள்.

குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் வரலாம். நிறைய சந்தோஷங்கள் அதிகரிக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேருவீர்கள். உறவினர் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். மாத பிற்பகுதியில் நான்காம் வீட்டில் உள்ள சூரியன் இடப்பெயர்ச்சியாகி ஐந்தாம் வீட்டில் உள்ள சனி உடன் மாத பிற்பகுதியில் இணைகிறார். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமண சுப காரியங்கள் கை கூடி வரும். எதிர்காலத்தைப் பற்றி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சளி தொந்தரவுகள் வரலாம். ஆறாம் விட்டில் குரு பகவானுடன் மாத பிற்பகுதியில் சுக்கிரன் இணையப்போகிறார். பணத்தை பத்திரப்படுத்துங்கள். யாரை நம்பியும் கையில் உள்ள பொருட்களை கொடுத்து விட்டு ஏமாந்து போக வேண்டாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் அற்புதங்கள் அதிகம் நடைபெறப்போகிறது. காரணம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசியில் 12ஆம் வீட்டிர் கேது, ஏழாம் வீட்டில் செவ்வாய்,நான்காம் வீட்டில் சுக்கிரன் சனி, மூன்றாம் வீட்டில் சூரியன், 5ஆம் வீட்டில் குரு, ஆறாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. குழப்பமான மனநிலையில் யோசித்துக்கொண்டு இருப்பீர்கள். திருமண சுப காரியம் நடைபெறுவதில் தயக்கம் ஏற்படும். பொருள் வரவு அதிகரிக்கும். திருமணம் சுப காரியத்தடைகள் நீங்கும். ஐந்தில் குரு பலமான பார்வையைத் தருகிறது. சுப காரியங்களில் ஈடுபடலாம். குரு பார்வையால் உங்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் சூரியன் நான்காம் வீட்டில் பயணம் செய்வார். சுகமான மாதமாக அமைந்துள்ளது. பொருள் வரவு அதிகரிக்கும். திருமண குடும்ப வாழ்க்கையிலும் காதலும் அதிகரிக்கும். ஏழாம் வீட்டில் உள்ள செவ்வாய் பகவானால் குடும்பத்தில் கார சார விவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செவ்வாய் பார்வை உங்கள் ராசிக்கு நேரடியாக கிடைப்பதால் பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. கோபப்பட்டு பேசி சண்டை சச்சரவை ஏற்படுத்த வேண்டாம். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. நான்காம் வீட்டில் சூரியன் சனி உடன் இணையும் போது அதிர்ஷ்டகாலம் ஆரம்பமாகிறது. சுப ஸ்தானத்தில் சூரியன் இணைவதால் உங்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும். அதிர்ஷ்டமான காலம் ஆரம்பமாகிறது. வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். இந்த மாதத்தில் திருமண சுப காரியங்கள் கை கூடி வரும். களத்திர காரகன் சுக்கிரன் 4ஆம் வீட்டில் இருப்பதால் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறப்போகிறது. மாத பிற்பகுதியில் சுக்கிரன் உச்சமடைவதால் புத்திர பாக்கியம் கை கூடி வரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர் வீட்டு சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். பிப்ரவரி மாதம் மன நிறைவு தரும் அதிர்ஷ்டகரமான மாதமாக அமைந்துள்ளது.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, பிப்ரவரி மாதம் உங்கள் ராசிக்குள் சுக்கிரன் செவ்வாய் பயணம் செய்கின்றனர். இரண்டாம் வீடான வாக்கு ஸ்தானத்தில் பயணம் சூரியன், சனி, புதன் சஞ்சரிக்கின்றனர். மூன்றாம் வீட்டில் குரு, ஆறாம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானமான 12வது வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த மாதத்தில் உங்களுக்கு முகப்பொலிவு கூடும். திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். குரு சந்திர யோகம் கை கூடி வரப்போகிறது. நவ கிரகங்களின் பயணம் சாதகமாகவே உள்ளது. ராகு கேதுக்குள் கிரகங்கள் அடங்கியுள்ளன. சர்ப்ப தோஷம் கூடியுள்ளது. வேலையில் புரமோசன் கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை கை கூடி வரும். இலக்கை நோக்கி பயணம் செய்யப்போகிறீர்கள். ராசி நாதன் குரு நான்காம் வீட்டில் இருப்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். உயர்கல்வி யோகம் கிடைக்கும். சூரியன் மாத பிற்பகுதியில் சனி உடன் மூன்றாம் வீட்டில் இணைவதால் அதிர்ஷ்டம் கை வரப்போகிறது. வாக்குக்கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். பல விசயங்களை வெளிப்படுத்த வேண்டாம். தர்ம கர்மாதிபதி யோகம் வரப்போகிறது. பெண்களுக்கு மனம் போல மாங்கல்யம் கை கூடி வரும். பெண்களின் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நோய்கள் விலகும் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் உடல் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். பிப்ரவரி மாதத்தில் நன்மைகள் அதிகம் நடைபெறும் திடீர் ஜாக்பாட் மூலம் பண வரவு அதிகரிக்கப்போகிறது.


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...