கண்ணம்மா போட்ட கண்டிஷன்.. மீண்டும் பாரதிக்கு கல்யாணம்.. சீரியலின் எதிர்பாராத கடைசி முடிவு!

 கண்ணம்மா போட்ட கண்டிஷன்.. மீண்டும் பாரதிக்கு கல்யாணம்.. சீரியலின் எதிர்பாராத கடைசி முடிவு!

பாரதிகண்ணம்மா சீரியலில் மீண்டும் கண்ணம்மாவுக்கும் பாரதிக்கும் திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்து இருக்கின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா பாரதியை மன்னித்து ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.

ஊர்க்காரர்கள் அனைவரும் பாரதி மற்றும் கண்ணம்மாவின் திருமணத்தை சிறப்பாக செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர்.


கண்ணம்மா தன்னுடைய கல்யாண விஷயத்தில் கண்டிஷன் ஒன்றை போட்டு இருக்கிறார்.

கண்ணம்மாவின் ஆசையை நிறைவேற்ற பாரதி குடும்பத்தோடு சேர்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார்.

கல்யாண விஷயத்தில் எழில் எடுத்த முடிவு.. கதறி அழும் ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி சீரியல் எதிர்பாராத முடிவுகல்யாண விஷயத்தில் எழில் எடுத்த முடிவு.. கதறி அழும் ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி சீரியல் எதிர்பாராத முடிவு

ஊர்க்காரர்களின் அன்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் எல்லோரும் கண்ணம்மா வீட்டுக்கு திரும்பி வந்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஊர் தலைவர் இப்போதுதான் எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஊருக்கு கண்ணம்மா தன்னந்தனியா வரும்போது எங்களுக்கு ரொம்பவே டாக்டர் மேல கோபத்தில் இருந்தோம். ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் இப்படி ஏமாற்றிவிட்டாரே என்று வருத்தத்தில் இருந்தோம் .ஆனால் இங்கே வந்து டாக்டர் எங்களுக்கு எவ்வளவு பெரிய உதவியும் செய்து இப்போது கண்ணம்மா மனதையும் மாற்றிவிட்டார் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். பின்பு தாமரை இந்த ஊரை விட்டு டாக்டர் போனாலும் மீண்டும் எந்த ஊருக்கு வைத்தியம் பார்க்க வர வேண்டும் .இங்கே ஒரு ஹாஸ்பிடல் நீங்க தனியா கட்டி வர வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார் .அதற்கு கண்ணம்மா தான் உதவ வேண்டும் என்று கூறுகிறார். பிறகு ஊர்க்காரர்கள் எப்போ சென்னைக்கு கிளம்ப போறீங்க என கேட்க, சீக்கிரம் போகணும் போய் கல்யாண வேலைகளை பார்க்கணும் என சௌந்தர்யா சொன்னதும் கணபதி ஏன் இந்த ஊரிலேயே கல்யாணத்தை வைக்கக் கூடாது என கேட்கிறார்.

கண்ணம்மாவின் கண்டிஷன்

கணபதியின் கேள்விக்கு பாரதியும் சம்மதம் சொல்ல, கண்ணம்மாவும் எனக்கும் எந்த மறுப்பும் இல்லை என்று கூறுகிறார். அடுத்து சௌந்தர்யா எனக்கு பரிபூரண சம்மதம் என்று கூறுகிறார் .ஆனால் கண்ணம்மா எனக்கு கல்யாணம் லட்சம் லட்சமா செலவு பண்ணி பிரமாண்டமா இருக்கணும்னு நான் ஆசைப்படலை. ஆனா மறக்க முடியாத விஷயமாக இருக்கணும். இத்தனை வருஷம் நான் பட்ட துன்பத்திற்கு ஆறுதலாக இருக்கணும் என கண்டிஷன் போடுகிறார்.


ஒரு ஐடியா சொல்லுங்க பாஸ்

கண்ணம்மாவின் கண்டிஷனை கேட்ட அனைவரும் கல்யாணத்தை எப்படி வித்தியாசமாக பண்ணுகிறது என யோசித்துக் கொண்டிருக்கின்றனர். பாரதியிடம் சௌந்தர்யா நீயே யோசித்து முடிவு எடு என்று சொல்ல, பாரதி கணபதியிடம் ஐடியா கேட்கிறார். பிறகு அகிலன், அஞ்சலி வர அவர்களிடமும் பாரதி ஐடியா கேட்கிறார் .அனைவரும் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கே வரும் கண்ணம்மா இங்க வந்து என்ன யோசனை செஞ்சுட்டு இருக்கீங்க என கேட்கிறார். கல்யாணம் வித்யாசமா இருக்கணும்னு சொன்னா அதனால் தான் என்ன பண்ணனும்னு யோசிச்சிட்டு இருக்கோம் என பாரதி சொல்ல, நான் வேணும்னா க்ளூ கொடுக்கிறேன் என்று கண்ணம்மா கூறுகிறார்.

மாட்டிக்கொண்ட பாரதி

இந்த கல்யாணம் எப்படி நடக்கணும்னு என்கிட்ட தெளிவா ஐடியா இருக்கு என கண்ணம்மா சொல்ல, என்ன ஐடியா? என்று அனைவரும் ஆவலோடு கேட்க, அதை சொல்ல மாட்டேன் என கடைசியில் கண்ணம்மா ஷாக் கொடுக்கிறார். பிறகு இரவு நேரத்தில் கண்ணம்மா தூங்கியதும் பாரதி ரூமுக்குள் சென்று கண்ணம்மாவின் டைரியில் கண்டிப்பாக ஏதாவது எழுதி வைத்திருப்பார் என அதைத் தேட முயற்சி செய்கிறார், ஆனால் அப்போது கண்ணம்மாவிடம் சிக்கிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...