டிடியின் மறுமணம்! முதல்முறையாக ரகசியங்களை உடைத்த எதிர் நீச்சல் ரேணுகா..

 டிடியின் மறுமணம்! முதல்முறையாக ரகசியங்களை உடைத்த எதிர் நீச்சல் ரேணுகா.. 

இதுதான் நிஜ காரணமாம்!? டிடிக்கு தொழிலதிபரோடு திருமணம் என்ற தகவல்கள் வெளியாகி வருவதை தொடர்ந்து அவருடைய சகோதரியான பிரியதர்ஷினி முதல் முறையாக அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

: விஜய் டிவியின் செல்ல பிள்ளையாகவும் தொகுப்பாளராகவும் வலம் வரும் டிடி என்ற திவ்யதர்ஷினி இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. டிடி தொழில் அதிபரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் அதை குறித்து எந்த விளக்கத்தையும் கொடுக்காமல் இருந்து வருகிறார்.இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் டிடி யின் அக்கா முதல் முறையாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இதுவரைக்கும் டிடி மறுமணத்தை பற்றி எந்த யோசனையும் இல்லாமல் தான் இருந்து வருகிறார் என்று கூறி இருக்கிறார். ஆரம்பத்தில் கிடைத்த வாய்ப்பு டிடி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி சின்னத்திரை 


ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்தான். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அதிகமாக ரசிகர்களை கவர்ந்து விடுகிறது. ஆரம்பத்தில் ஒரு நிகழ்ச்சியில் தனது வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த டிடி தனக்கு ஒரே ஒரு வாய்ப்பு தந்து உதவும்படியும் அதில் தான் எப்படி கொண்டு செல்கிறேன் என்பதை பார்த்து பிறகு நீங்கள் யோசித்துக் கொள்ளுங்கள் என்று விஜய் டிவியிடம் பேசியிருக்கிறார். முதல் நாள் அன்புடன் டிடி என்ற நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கியதை பார்த்து வியந்து போன விஜய் டிவி தொடர்ந்து அவருக்கே அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறது. தற்போது அதிகமாக முக்கியமான நிகழ்ச்சி என்றாலே அதில் டிடி தான் தொகுத்து வழங்கி வருகிறார். உடல் நல பிரச்சனை டிடிக்கு சமீபத்தில் உடல்நல பிரச்சனை ஏற்பட்டு இருப்பது சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் தெரிந்தது. அதுவும் குறிப்பாக தன்னுடைய உடல் நலத்தை பற்றி பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்குள் சென்றிருக்கும் போதும் விரிவாக கூறியிருந்தார். தான் அதிகமாக நின்று கொண்டு தன்னால் பேச முடியாது என்பதை அவர் விளக்கி இருந்தார் ஆனாலும் விடாமுயற்சியோடு தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் தன்னுடைய திறமையை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வரும் டிடி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷனை கொண்டு சென்றது அனைவரையும் பாராட்ட வைத்தது. திருமணம் குறித்த வதந்தி தொகுப்பாளராக மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் டிடியின் வாழ்க்கையில் திருமணத்தில் எதிர்பார்க்காத சோகம் நடைபெற்றது. அவர் சிறுவயது நண்பராக இருந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார். ஆனால் அவருடைய வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு அப்படியே மாறிவிட்டது. ஒரு சில மாதங்களுக்குள் இவருடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் தற்போது அந்த திருமணத்திலிருந்து இவர் வெளியேறியும் விட்டார். ஆனாலும் தன்னுடைய வழக்கமான பணிகளில் கவனத்தை செலுத்தி வரும் டிடியை பற்றி சமூக வலைத்தளத்தில் அதிகமான வதந்திகள் பரம்பிக் கொண்டிருக்கிறது. விரைவில் டிடிக்கு இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாகவும், அவருடைய வருங்கால கணவர் ஒரு தொழில் அதிபர் என்பது பற்றியும் சமூக வலைதளத்தில் அதிகமான கருத்துக்களும் புகைப்படங்களும் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. வதந்திகளுக்கு விளக்கம் இந்த நிலையில் டிடியில் சகோதரி

,எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகாவாக நடிக்கும் பிரியதர்ஷினி முதல்முறையாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசி இருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். அதில் டிடியை பற்றி பரவி வரும் செய்தியை பார்த்து நாங்களும் டிடியிடம் யார் அந்த தொழிலதிபர் என்று கேட்டோம். அதற்கு டிடி எனக்கே தெரியவில்லை என்று கூறிவிட்டாள், பொதுவாக இந்த மாதிரி வதந்திகள் வருவது அடிக்கடி நடப்பது தான். அதை நாங்கள் கண்டு கொள்வதே இல்லை. டிடி எப்போதும் அவளுடைய வாழ்க்கையில் வேலையில் தான் கவனமாக இருக்கிறார் .இப்போ வரைக்கும் டிடி இரண்டாவது திருமணத்தை பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை .நாங்கள் எதுவும் கேட்டாலும் அவள் சிரிப்பை மட்டும் தான் எப்போதும் போல எங்களுக்கு பதில் அளிப்பார். ஆனால் நாங்கள் அந்த வதந்திகளை கண்டு கொள்வதில்லை என்று கூறி இருக்கிறார். முற்றுப்புள்ளி  ஏற்கனவே டிடி, நடிகர் ஆர்கே சுரேஷ் மனைவியின் இரண்டாவது குழந்தையின் வளைகாப்பு ஃபங்ஷனுக்கு சென்றிருந்தார். அப்போது தனது சகோதரி ஆன பிரியதர்ஷினி யின் மகனோடு சென்றிருந்தார். ஆனால் அந்த நேரத்தில் கூட அந்த புகைப்படங்களையும் பலர் வெளியீட்டு இதுதான் டிடி திருமணம் செய்து கொள்ளப் போகும் நபரா? என்று வதந்திகளை பரப்பி வந்தனர். அதைக் குறித்தும் இப்படித்தான் தேவையில்லாத வதந்திகள் எல்லாம் பரவிக்கொண்டே இருக்கும். இதற்கெல்லாம் செவி சாய்த்தால் நம்முடைய நிம்மதி சந்தோஷம் எல்லாமே கெட்டுப் போய்விடும். அதனால் அடுத்தது என்ன நடக்க இருக்கிறதோ அது அப்படியே நடந்து போகட்டும் என்று கடந்து விட வேண்டியது தான் என்று பிரியதர்ஷினி அவருக்கே உரிய வழக்கமான சிரிப்போடு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...