தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!


தமிழகத்தில் நீண்ட நாள் கோரிக்கைக்கு பிறகும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தாத நிலையில் உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு வரைக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பலன்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2004 ஆம் ஆண்டில் இருந்து புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கடந்த சில வருடங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்திய பின்னரும் கூட பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றம் செய்யப்படவில்லை.

பழைய ஒய்வூதிய திட்டம் :

மேலும், சட்டமன்றத் தேர்தலில் திமுக கட்சியின் சார்பில் தமிழகத்தில் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பலன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகியும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தியுள்ளனர்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...