இஸ்ரோவின் சந்திராயன் 3 ஏவுகணை விண்ணில் செலுத்தும் நிகழ்வை நேரலையாக மாணவர்களுக்கு காண்பிக்க கோரிக்கை
தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர் சங்கத்தின் கோரிக்கை :
இன்று எங்கள் சங்கத்தின் சார்பாக இஸ்ரோவின் சந்திராயன் 3 ஏவுகணை வரும் 14.07.2023 வெள்ளிக்கிழமை 2.35PM மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியை நேரலையாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர், முதன்மை செயலாளர், இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் ஆகியோர்களுக்கு விண்ணப்பித்துள்ளோம்.
இதனால் மாணவர்கள் மனதில் வானவியல் பற்றிய அறிவு வளர்த்துக் கொள்ள ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்பது பள்ளி ஆய்வக உதவியாளர்கள் சங்கத்தின் கருத்து ஆகும்.
இப்படிக்கு
மா அர்ஜுன்,
மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர் சங்கம்.
C. No: 7904657536