மாணவரின் இடுப்பு , தோள்பட்டை ஆசிரியர்கள் கை , கால் அளவெடுக்கும் டெய்லர்களாக மாற்றும் ' எமிஸ் '..!! - PADAVELAI

PADAVELAI

Daily TN Study Materials & Question Papers,Educational News

Post Top Ad

Thanks for Reading

Friday, July 28, 2023

மாணவரின் இடுப்பு , தோள்பட்டை ஆசிரியர்கள் கை , கால் அளவெடுக்கும் டெய்லர்களாக மாற்றும் ' எமிஸ் '..!!

மாணவரின் இடுப்பு , தோள்பட்டை ஆசிரியர்கள் கை , கால் அளவெடுக்கும் டெய்லர்களாக மாற்றும் ' எமிஸ் '..!!

மாணவர்களின் இடுப்பு, தோள்பட்டை, கை, கால் அளவெடுத்து அவற்றை 'எமிஸ்'ல் பதிவேற்றும் செய்ய ஆசிரியர்கள் 'டெய்லர்களாக மாறி' படாதபாடு படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.


அரசு வழங்கும் இலவச சீருடைக்காக ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் சட்டை, பேன்ட், மாணவிகளுக்கான பேன்ட், சுரிதாருக்கு அந்தந்த வகுப்பு ஆசிரியர்களே அளவு எடுத்து 'எமிஸ்'ல் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


இதனால், இதுவரை எண்ணும் எழுத்து திட்டத்திற்காக தாங்களே இரவில் விழித்து துணை கருவிகள் (டி.எல்.எம்.,) தயாரித்து பைகளில் துாக்கிச் செல்லும் ஆசிரியர்கள் தற்போது 'டேப்'யையும் (அளவெடுக்க) கையோடு எடுத்துச் செல்கின்றனர்.


தற்போது எடுக்கப்படும் மாணவர் அளவு விபரம் வரும் டிசம்பரில் வழங்கப்படவுள்ள சீருடைக்காக எடுக்கப்படுகிறது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களுக்கு பின் இந்த அளவு சரியாக இருக்குமா என குழப்பம் உள்ளது. மேலும் இப்பதிவுகளை 'எமிஸ்' இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிறது. இதனால் கற்பித்தல் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை என ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.


அவர்கள் கூறியதாவது:


ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தோள்பட்டை அளவு பெரும்பாலும் 13 முதல் 16 செ.மீ., உள்ளது. ஆனால் 'எமிஸ்'ல் மாணவர்களின் தோள்பட்டை அளவு குறைந்தது 20 செ.மீ., இருந்தால் தான் பதிவேற்றம் செய்ய முடிகிறது. அதற்கு கீழ் உள்ள செ.மீ., அளவுகளை பதிவேற்றம் செய்ய 'ஆப்ஷன்' இல்லை. மாணவர், ஆசிரியர் வருகை பதிவு உட்பட 'எமிஸ்'ல் உள்ள 'ஆப்'களில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பதிவுகளை தினமும் ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர்.


அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்படுவதால் பதிவேற்றம் செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் இடுப்பை, கை கால் அளவை பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன் எடுக்கப்படும் அளவு சரியாக இருக்குமா.

கற்பித்தல் அல்லாத பணிகள்


'மாஸ் டிரில்' (Mass drill) வாரம் இரண்டு பாடவேளை, கல்விசாரா செயல்பாடு வாரம் இரண்டு, இணை செயல்பாடுகள் வாரம் இரண்டு,கலையரங்கம் வாரம் இரண்டு, சிறார் திரைப்படம் மாதம் மூன்று பாடவேளை, தினம் ஒரு நுாலக பாடவேளை, மாதத்தில் ஒரு வாரம் கணினியில் தேர்வு என கற்பித்தல் அல்லாத பணிகள் பின்பற்றப்படுவதால் கற்பித்தல் பணி ஏற்கனவே கேள்விக்குறியாகி வருகிறது. தற்போது மாணவர்களுக்கு அளவான சீருடை கிடைக்க ஆசிரியர்கள் டெய்லர்களாக மாறி வருகிறோம். ஆனால் அதற்கேற்ப சீருடை தரமாக இருந்தால் சரி. மாணவர்களுக்காக எல்லாமுமாக மாற தயாராக உள்ளோம், என்றனர்.

கற்பித்தல் அல்லாத பணிகள் பின்பற்றப்படுவதால் கற்பித்தல் பணி ஏற்கனவே கேள்விக்குறியாகி வருகிறது. தற்போது மாணவர்களுக்கு அளவான சீருடை கிடைக்க ஆசிரியர்கள் டெய்லர்களாக மாறி வருகிறோம்.

தினமலர் செய்தி :



No comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Post Top Ad

share your friends