சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு: அரசாணை வெளியீடு..!

சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு: அரசாணை வெளியீடு..!

முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு. 

கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி சட்டப்பேரவையில் சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ரகுபதி, சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையில் பணிபுரியும் முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக ரூ.200 இல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இடர் படி ரூ.800 இல் இருந்து  ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். 

இந்த நிலையில் தமிழக சிறைகளில் பணியாற்றும் முதல் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான மிகைநேர பணிக்கான ஊதியம் உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,  சிறைத்துறையில் பணியாறும் முதல் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான மிகை நேர பணிக்கான ஊதியம் காவல் தறை கவாலர்களுக்கு ரூ.200 இல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படும். இதற்காக ரூ.3.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...