நான் விரும்பும் தலைவர் அப்துல் கலாம் பற்றிய கட்டுரை.!

குறிப்பு சட்டகம்:

  • முன்னுரை
  • பிறப்பு மற்றும் வாழ்க்கை முறையும்
  • இந்திய குடியரசு தலைவர் ஆன கதை
  • இவரது சாதனைகள்
  • முடிவுரை

முன்னுரை:

நான் விரும்பும் தலைவர்களில் அப்துல் கலாம் அவர்களுக்கு எப்போதும் ஒரு தனியிடம் உண்டு. ஏனெனில் இவர் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து உலகமெங்கும் இந்தியாவின் பெருமையை பேச செய்த அணுவிஞ்ஞானி ஆவார்.

பின்னாளில் இவர் இந்தியாவின் குடியரசு தலைவராக உயர்ந்தவர். வறுமையான பின்புலத்தில் இருந்து தனது தன்னம்பிக்கை விடாமுயற்சி போன்றவற்றால் சாதித்து காட்டிய அப்துல்கலாம் அவர்களுடைய வரலாறு பலபேருக்கு சிறந்த முன்னுதாரணமாக உள்ளது.

பிறப்பு மற்றும் வாழ்க்கை முறையும்:

அப்துல் கலாம் அவர்கள் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி  ஜைனுலாப்தீன்கும் ஆயிஷாமாவிற்கும் மகனாக இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் தனது ஆரம்ப கால பள்ளி படிப்பை இராமேஸ்வரத்தில் உள்ள தொடக்க பள்ளியில் பயின்றார்.
இவரது குடும்பம் எளிமையான குடும்பம் என்பதால் அதன் வருமானத்தை சமாளிக்கும் வகையில் சிறு வயதிலேயே பகுதி நேரங்களில் செய்தி தாள்களை விநியோகிக்கும் வேலை பார்த்தார்.
இவருக்கு கல்வி கற்பித்த சிவசுப்ரமணியம் என்ற ஆசிரியரின் உதவியோடு இவர் மேல்நிலை கல்வியினை தொடர்ந்தார். 1955 இல் சென்னை எம்.ஜ.ரி கல்லூரியில் சேர்ந்து விண்வெளி பொறியியல் படிப்பு படித்தார்.

இவருக்கு விமானியாக வேண்டும் என்ற பெருங்கனவு இருந்தது அதற்காக நடத்தப்பட்ட தேர்வில் இவர் 9 ஆவது இடத்தையும் பிடித்தார். ஆனாலும் இவருக்கு விமானியாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
1960 இல் மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் வானூர்தி அபிவிருத்தி அமைப்பில் விஞ்ஞானியாக தனது ஆராய்ச்சி வாழ்க்கையை தொடங்கினார். பின்னாளில் இஸ்ரோவில் இணைந்து பணியாற்ற துவங்கினார்.

குடியரசு தலைவரான கதை:

இவர் தொடர்ச்சியாக விண்வெளியில் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஏவிய செயற்கை கோளான Slv 3-யினை ஏவுவதில் முக்கிய பங்காற்றினார்.
இதனை பாராட்டும் வகையில் இந்திய அரசின் உயரிய விருதான “பத்ம பூசன்” 1981 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவ்வாறு இந்தியாவை தனது பணிகளால் பெருமையடைய செய்தார்.
அதை தொடர்ந்து 1963 தொடக்கம் முதல் 1983 வரை இஸ்ரோவில் சிறப்பாக பணியாற்றினார். பின்பு 1999 இல் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் பங்களித்தார்.

பின்னர் “அக்னி பிரித்வி ஆகாஷ்” எனப்படும் ஏவுகணை திட்டத்தில் முக்கிய பங்காற்றினார். இவ்வாறு இவரது செய்த சாதனைகளையும், சேவையையும் கண்டு பலரும் வியந்தனர்.
பின்னர் இவர் 2002 ஆம் ஆண்டில் குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவரானார். இவர் மக்களின் ஜனாதிபதி என அன்போடு அழைக்கப்பட்டார்.

இவரது சாதனைகள்:

இவர் இந்தியாவிற்கென தனியாக செயற்கை கோள்களை விண்ணில் ஏவிய பெருமைக்குரியவர் மற்றும் கண்டம்விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகளை உருவாக்கினார்.
இவர் மாணவர்களுக்கு கற்பிப்பதை விரும்பினார் இதனால் சென்னை பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம் போன்றவற்றில் வருகை விரிவுரையாளராக பணியாற்றினார்.
இவர் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் சென்று இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற கனவை மக்கள் மனதில் பதிய வைத்தார். நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி உள்ளார்.
அறிவார்ந்த இளைஞர்கள் தமது அறிவு, நேரம், ஆற்றலை பயன்படுத்தி 2020-க்குள் இந்தியாவை அனைத்து துறையிலும் முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என இவர் விரும்பினார்.
இவர் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார் இவர் “அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள்” போன்ற நூல்களையும் எழுதினார்.

முடிவுரை:

இந்தியா வல்லரசாக வேண்டும் என்றும் “கஷ்டம் வரும் போது கண்களை மூடாதே அது உனை கொன்று விடும் கண்ணை திறந்து பார் அதை நீ வென்று விடுவாய்” போன்ற நல்ல கருத்துக்களை மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மனதில் விதைத்த A.P.J அப்துல் கலாம் அவர்கள் 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் சொற்பொழிவு ஆற்றி கொண்டிருக்கும் பொழுதே இறந்துவிட்டார்.
இவர் பல்வேறான விருதுகளை பெற்றிருந்தாலும் கூட மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் மக்களுக்காகவே வாழ்ந்தவர். இவரது உந்துதல் இன்றைய இந்தியாவுக்கும் உலகத்துக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும் என்பதில் எந்த ஒரு ஜயமும் இல்லை.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...