Daily TN Study Materials & Question Papers,Educational News

அண்ணா பல்கலை.யில் நடப்பாண்டு 2 தொழிற்கல்வி படிப்புகள் அறிமுகம்...!!

அண்ணா பல்கலை.யில் நடப்பாண்டு 2 தொழிற்கல்வி படிப்புகள் அறிமுகம்...!!

அண்ணா பல்கலை.யில் நடப்பாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பி.வோக் சரக்கு மேலாண்மை, பி.வோக் காலணி உற்பத்தி ஆகிய தொழிற்கல்வி படிப்புகளில் சேர்ந்து மாணவர்கள் பயன்பெற வேண்டுமென அதன் துணைவேந்தர் வேல்ராஜ் கூறினார்.

தற்போதைய காலத்துக்கேற்ப கல்வி மற்றும் ஆராய்ச்சியில் புதியசெயல்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இளநிலை தொழிற்கல்வி (Bachelor of Vocational Degree) எனும் 3 ஆண்டு படிப்புகள் நடப்பாண்டு அறிமுகம் செய்யப்பட்டன. முதல்கட்டமாக ஆரணியில் உள்ள அண்ணாபல்கலை. உறுப்புக் கல்லூரியில் காலணி உற்பத்தி (Footware Manufacturing) மற்றும் காஞ்சிபுரம் உறுப்புக் கல்லுரியில் சரக்கு மேலாண்மை (Logistics Management) படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்விரு படிப்புகளில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாததால் சேர்க்கை குறைவாகவே இருக்கிறது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது; இவ்விரண்டும் திறன்சார்ந்தபடிப்புகளாகும். தற்போதைய சூழலில் அறிவைவிட திறனை வளர்த்து கொள்வது அவசியமாகும். வரும்காலங்களில் பொறியியல் படிப்பு முடித்தவர்களைவிட இத்தகையதொழிற் கல்வி படித்தவர்களுக்குதான் வேலைவாய்ப்பு அதிகளவில் இருக்கும்.

தொழிற்கல்வி மீதான தவறான புரிதல்களை மாற்றினால்தான் நாம் வேலைவாய்ப்புகளில் முன்னேற முடியும். தொடர்ந்து அந்தந்த பகுதிகளில் உள்ள தொழில்கள் சார்ந்துஇத்தகைய படிப்புகள் விரிவுப்படுத்தப்பட உள்ளது. சேர்க்கைசரிந்து வருவதால் வரும்காலங்களில் பொறியியல் படிப்புகளின் இடங்களை குறைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த படிப்புகள் குறித்த கூடுதல் தகவல்களை பல்கலை. இணையதளத்தில் (https://www.annauniv.edu/) சென்று தெரிந்து கொள்ளலாம்.

இதற்கிடையே பணிபுரிந்து கொண்டே படிக்க விரும்புபவர்களுக்கான புதிய கல்வி முறையைஏஐசிடிஇ தற்போது அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இதற்கு தமிழக அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. இந்த கல்வி முறைக்கு அனுமதி தந்து மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு வழிசெய்ய வேண்டும்.

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

Unordered List

Support