தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை.. காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை – மாநில அரசு அதிரடி!

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை.. காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை – மாநில அரசு அதிரடி!



இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி பட்டாசுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


தீபாவளி பட்டாசு

நாடு முழுவதும் வருகிற நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசுகள் தான் நியாபகத்திற்கு வரும். ஆனால் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டை தடுக்க கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பயிர் கழிவுகளை எரிப்பது, டீசல் வாகனங்களின் பயன்பாடு, தொழிற்சாலை மாசு ஆகியவற்றால் காற்று மாசு அதிகரித்து வருகிறது.


பொதுவாக காற்று மாசு அளவு 50க்கு குறைவாக இருக்க வேண்டும். ஆனால் டெல்லியில் தற்போது 300யை கடந்து மிகவும் மோசம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவது தான். மேலும் ஹரியானா மாநிலத்தில் பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதையும் தடை செய்ய வேண்டும் என டெல்லி அரசு கோரிக்கை வைத்துள்ளது. அது மட்டுமில்லாமல் டெல்லி எல்லையை ஒட்டி உள்ள உத்திரபிரதேசம் மற்றும் ஹரியானா புறநகர் பகுதிகளிலும் பட்டாசுகளுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என டெல்லி அரசு வலியுறுத்தி இருக்கிறது

Post a Comment

0 Comments