10th Tamil Guide Unit 4.3 - பரிபாடல்

10th Tamil Guide Unit 4.3 - பரிபாடல்

விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்

கரு வளர் வானத்து இசையில் தோன்றி,

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;

உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்

செந்தீச் சுடரிய ஊழியும்; பனியொடு

தண்பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று

உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,

மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்

உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும் …

பா. எண். 2 : 4-12

சொல்லும் பொருளும்

 1. விசும்பு – வானம்
 2. ஊழி – யுகம்
 3. ஊழ் – முறை
 4. தண்பெயல் –  குளிர்ந்த மழை
 5. ஆர்தருபு – வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த
 6. ஈண்டி – செறிந்து திரண்டு

II. இலக்கணக் குறிப்பு

 1. ஊழ்ஊழ் – அடுக்குத்தொடர்
 2. வளர்வானம் – வினைத்தொகை
 3. செந்தீ – பண்புத்தொகை
 4. வரா (ஒன்றன்) – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
 5. தோன்றி – வினையெச்சம்
 6. மூழ்கி – வினையெச்சம்
 7. கிளர்ந்த – பெயரெச்சம்

கிளர்ந்த =  கிளர் + த் (ந்) + த் + அ

 • கிளர் – பகுதி
 • த் – சந்தி
 • த் (ந்) – ந் ஆனது விகாரம்
 • த் – இறந்தகால இடைநிலை
 • அ – பெயரச்ச விகுதி

IV. பலவுள் தெரிக

1.பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

 1. வானத்தையும் பாட்டையும்
 2. வானத்தையும் புகழையும்
 3. வானத்தையும் பூமியையும்
 4. வானத்தையும் பேரொலியையும்

விடை : வானத்தையும் பேரொலியையும்

III. குறு வினா

1.உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிதவற்றைக் குறிப்பிடுக

நிலம்

நீர்

காற்று

வானம்

நெருப்பு

IV. சிறு வினா

1.நம் முன்னோர் அறிவியல் கருத்துக்களை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாக தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க.

பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியிலை நான்காம் தமிழாக கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கி வரும் தமிழ் மொழியில் அறிவயில் என்பது தமிழர் வாழ்வியேலாடு கலந்து கரைந்து வந்துள்ளதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன.

சங்க இலக்கியமான் பரிபாடலில்….பூமியின் தோற்றம் குறித்து சொல்லப்பட்டுள்ளது.

எதுவுமே இல்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்கு காரணமான கரு பேராெலியுடன் தோன்றியது.

உருவமில்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களடன் வளர்கின்ற என்னும் முதல் பூதங்கள் உருவாகின.

அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள்கள் சிதறும் படியாகப் பல காலங்கள் கடந்தது.

பின்னர் பூமி குளிரும் படியாகத் தொடரந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.

மீண்டும் மீண்டும் நிறை வெள்ளத்தில்  இப்பெரிய புவி மூழ்கி உயிர்கள் உருவாகி வாழ்வத்ற்கு ஏற்ற சூழல் தோன்றியது.

இச்சூழல் மாற்றத்தினால் உயிர்கள் தோன்றி நிலை பெற்று வாழ்கின்றன.

புவி உருவாகிய நிகழ்வை அறிவியல் அறிஞர்கள் கண்டறியும் முன்பே நம் தமிழர் கண்டறிந்தனர் என்பது தமிழருக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியும் பெருமைக்குரிய செயலுமாகும்.

பரிபாடல் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பரிபாடல் _________ நூல்களுள் ஒன்று.

விடை : எட்டுத்தொகை

2. பரிபாடலை எழுதியவர் _________

விடை : கீரந்தையார்

3. பரிபாடல் _________ என்னும் புகழுடையது.

விடை : ஓங்கு பரிபாடல்

4.  _________ என்பவர் அமெரிக்க வானியல் அறிஞர்.

விடை : எட்வின் ஹப்பிள்

5. முதல் பூசம் எனப்படுவது _________ ஆகும்.

விடை : வானம்

10th Tamil Guide Unit 4.3

II. குறு வினா

1. சங்க இலக்கிய நூல்கள் மூலம் நீவீர் அறிந்து கொள்ளும் செய்தி யாது?

ஈராயிம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, அறிவாற்றல், சமூக உறவு, இயற்கையப் புரிந்து கொள்ளும் திறன்.

2. பரிபாடல் நூல் குறிப்பு வரைக.

அகம் சார்ந்த பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

இந்நூல் ” ஓங்கு பரிபாடல்” என்னும் புகழுடையது.

சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல்.

உரையாசிரியர்கள்  எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

இப்போது 24 பாடல்களே கிடைத்துள்ளன.

3. அண்டப்பகுதி குறித்து மாணிக்கவாசகர் குறிப்பிடும் செய்தி யாது?

அண்டப்குதியின் உருண்டை வடிவம் ஒப்பற்ற வளமான காடசியும் ஒன்றுடன் ஒன்று நூறு கோடிக்கும் மேல் விரிந்து நின்றன.

கதிரவனின் ஒளிக்கற்றையில் தெரியும் தூசுத்துகள் போல அவை நுண்மையாக இருக்கின்றன.

4. பால்வீதி பற்றி எட்வின் ஹப்பிள் நிருபித்துக் கூறிய செய்தியை கூறு

அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன.

வெளியே எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன.

வெளியே நின்று அதைப் பார்த்தோமெனில் சிறுதூசி போலக் கோடிக்கணக்கான பால்வீதிகள் தூசுகளாத் தெரியும்.

10th Tamil Guide Unit 4.3

பலவுள் தெரிக

1.பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடு.

1. தண்பெயல் – வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த

2. ஆர் தருபு – செறிந்து திரண்டு

3. பீடு – குளிர்ந்த மழை

4. ஈண்டி – சிறப்பு

அ) 1, 3, 2, 4

ஆ) 3, 2, 4, 1

இ) 4, 2, 1, 3

ஈ) 3, 1, 4, 2

Answer:

ஈ) 3, 1, 4, 2

2.இதுவரைக்கும் நமக்குக் கிடைத்துள்ள பரிபாடல் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

அ) 24

ஆ) 34

இ) 44

ஈ) 54

Answer:

அ) 241

3.எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று

அ) பரிபாடல்

ஆ) முல்லைப் பாட்டு

இ) நாலடியார்

ஈ) மூதுரை

Answer:

அ) பரிபாடல்

4.‘விசும்பில் ஊழி’ எனத் தொடங்கும் பரிபாடலை எழுதியவர்.

அ) நக்கீரர்

ஆ) மருதனார்

இ) கீரந்தையார்

ஈ) ஓதலாந்தையார்

Answer:

இ) கீரந்தையார்

5.பரிபாடல் “ ……………….. ” என்னும் புகழுடையது.

அ) நற்பரிபாடல்

ஆ) புகழ் பரிபாடல்

இ) ஓங்கு பரிபாடல்

ஈ) உயர் பரிபாடல்

Answer:

இ) ஓங்கு பரிபாடல்

6.சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் …………………

அ) நற்றிணை

ஆ) முல்லைப்பாட்டு

இ) பட்டினப் பாலை

ஈ) பரிபாடல்

Answer:

ஈ) பரிபாடல்

7.பரிபாடலில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளவர்கள் ………………………

அ) புலவர்கள்

ஆ) வரலாற்று ஆய்வாளர்கள்

இ) இலக்கிய ஆய்வாளர்கள்

ஈ) உரையாசிரியர்கள்

Answer:

ஈ) உரையாசிரியர்கள்

8.எட்வின் ஹப்பிள் என்பவர்………………….

அ) அமெரிக்க மருத்துவர்

ஆ) பிரெஞ்சு ஆளுநர்

இ) அமெரிக்க வானியல் அறிஞர்

ஈ) போர்ச்சுக்கீசிய மாலுமி

Answer:

இ) அமெரிக்க வானியல் அறிஞர்

9.எட்வின் ஹப்பிள் ………………..இல் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார்.

அ) 1921

ஆ) 1821

இ) 1924

ஈ) 1934

Answer:

இ) 19241

10.“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்.

சிறிய ஆகப் பெரியோன் தெரியின்” – என்று குறிப்பிடும் நூல்?

அ) பரிபாடல்

ஆ) கலித்தொகை

இ) பெருமாள் திருமொழி

ஈ) திருவாசகம்

Answer:

ஈ) திருவாசகம்

11.பொருத்திக் காட்டுக.

i) ஊழ் ஊழ் – 1. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

iii) வளர் வானம் – 2. பண்புத்தொகை

iii) செந்தீ – 3. வினைத்தொகை

iv) வாரா – 4. அடுக்குத் தொடர்

அ) 4, 3, 2, 1

ஆ) 3, 4, 2, 1

இ) 2, 4, 1, 3

ஈ) 4, 2, 1, 3

Answer:

அ) 4, 3, 2, 1

12.பொருத்திக் காட்டுக.

i) விசும்பு – 1. சிறப்பு

ii) ஊழி – 2. யுகம்

iii) ஊழ் – 3. வானம்

iv) பீடு – 4. முறை

அ) 3, 2, 4, 1

ஆ) 4, 3, 2, 1

இ) 1, 2, 3, 4

ஈ) 3, 4, 1, 2

Answer:

அ) 3, 2, 4, 1

13.‘கிளர்ந்த’ என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை ………………

அ) கிளர்ந்து + அ

ஆ) கிளர் + த் + த் + அ

இ) கிளர் + ந் + த் + அ

ஈ) கிளர் + த்(ந்) + த் + அ

Answer:

ஈ) கிளர்+த்(ந்)+த்+அ

14.முதல் பூதம் எனப்படுவது ………………..

அ) வானம்

ஆ) நிலம்

இ) காற்று

ஈ) நீர்

Answer:

அ) வானம்

15.“கரு வளர் வானத்து இசையில் தோன்றி,

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்”

– இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள இலக்கிய நயம்?

அ) எதுகை

ஆ) மோனை

இ) இயைபு

ஈ) அந்தாதி

Answer:

அ) எதுகை

16.முதல் பூதம் …………..

அ) வானம்

ஆ) நிலம்

இ) நீர்

ஈ) காற்று

Answer:

அ) வானம்

17.பரிபாடலில் புவிக்குக் கூறப்பட்ட உவமை ……………………..

அ) நெருப்புப் பந்து

ஆ) உருவம் இல்லாத காற்று

இ) வெள்ளம்

ஈ) ஊழி

Answer:

அ) நெருப்புப் பந்து

18.“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் அமைந்துள்ள பெரும்பான்மை நயம் ……………….

அ) எதுகை

ஆ) மோனை

இ) முரண்

ஈ) இயைபு

Answer:

ஆ) மோனை

19.நெருப்புப்பந்தாய் வந்து குளிர்ந்தது ……………

அ) பூமி

ஆ) காற்று

ஈ) நீர்

Answer:

அ) பூமி

20.“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் ‘விசும்பு’ என்னும் சொல்லின் பொருள் ………………….

அ) வானம்

ஆ) காற்று

இ) யுகம்

ஈ) முறை

Answer:

அ) வானம்

21.“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் ‘ஊழி’ என்னும் சொல்லின் பொருள் ………………….

அ) வானம்

ஆ) காற்று

இ) யுகம்

ஈ) முறை

Answer:

இ) யுகம்

22.“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் ‘ஊழ்’ என்னும் சொல்லின் பொருள் ……………………

அ) வானம்

ஆ) காற்று

இ) யுகம்

ஈ) முறை

Answer:

ஈ) முறை

23.1300ஆண்டுகளுக்கு முன் திருஅண்டப்பகுதி பற்றிக் கூறியவர் ……………………

அ) மாணிக்கவாசகர்

ஆ) கீரந்தையார்

இ) பெருஞ்சித்திரனார்

ஈ) கபிலர்

Answer:

அ) மாணிக்கவாசகர்

24.“தண்பெயல் தலைஇய ஊழியும்” இதில் ‘குளிர்ந்த மழை’ என்னும் பொருள் தரும் சொல் ……………………

அ) தண்பெயல்

ஆ) தலை

இ) இய

ஈ) ஊழி

Answer:

அ) தண்பெயல்

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...