10th Tamil Guide Unit 4.5 - இலக்கணம் – பொது
I. பலவுள் தெரிக
1.குலசேகர ஆழ்வார் ‘வித்துவக்கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே –
- மரபு வழுவமைதி, திணை வழுவமைதி
- இடவழுவமைதி, மரபு வழுவமைதி
- பால் வழுவமைதி, திணை வழுவமைதி
- கால வழுவமைதி, இடவழுவமைதி
விடை : பால் வழுவமைதி, திணை வழுவமைதி
II. குறு வினா
1. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
கோடையில் பள்ளி விடுமுறை என்பதால் ஆரல்வாய்மொழிக்குச் செல்ல திட்டமிருக்கும் உறுதித்தன்மை நோக்கி காலவழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக இத்தொடர் அமைகிறது.
2. “சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.
சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினாள்.
III. சிறு வினா
4. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், “இலச்சுமி கூப்பிடுகிறாள், போய்ப் பார்” என்றார். “இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து, “என்னடா விளையாடவேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன். என் தங்கை அங்கே வந்தாள். அவளிடம், “நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன். அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.
இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.
திருத்தப்பட்ட வழுக்கள்
நேற்றிரவு பெய்த மழை தொட்டியை நிறைத்தது.
வாழைத் தோட்டத்தில் கன்றுடன் நின்றிருந்த மாடு கதறியது.
துள்ளிய கன்றைத் தடவிக் கொடுத்த…
வழுவமைதித் தொடர்கள் வழுவமைதி வகை
1. நேற்று பெய்த மழை தொட்டியை
நிறைந்திருந்தது (நிறைந்தது) கால வழுவமைதி
2. இலட்சுமி கூப்பிடுகிறாள்.
(மாட்டைக் குறிக்கிறது) திணை வழுவமைதி
3. இதோ சென்று விட்டேன்
(சென்று விடுகிறேன்) கால வழுவமைதி
4. என்னடா விளையாட வேண்டுமா?
(மாட்டைக் குறிக்கிறது) திணை வழுவமைதி
5. அவனை அவிழ்த்து விட்டேன்.
(பசு மாட்டைக் குறிக்கிறது) திணை வழுவமைதி
6. இலட்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.
(மாட்டைக் குறிக்கிறது) திணை வழுவமைதி
இலக்கணம் பொது – கூடுதல் வினாக்கள்
I. குறு வினா
1. உயர்தினை, அஃறிணை என்றால் என்ன?
ஆறறிவுடைய மக்களை உயர்திணை என்றும் மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் அஃறிணை (அல்திணை) என்றும் வழங்குவர்.
2. உயர்திணையின் பிரிவுகளை கூறு
உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பிரிவுகளை உடையது.
3. அஃறிணையின் பிரிவுகளை கூறு
அஃறிணை ஒன்றன்பால், பலவின்பால் என இரு பிரிவுகளை உடையது.
4. மூவிடம் வகையினை கூறுக
தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூன்று வகைப்படும்.
5. வழாநிலை என்றால் என்ன?
இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்.
6. வழு என்றால் என்ன?
இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்
இரு திணையும் ஐம்பாலும் மூவிடமும் காலமும் வினாவும் விடையும் பலவகை மரபுகளும் ஆகிய ஏழும் தொடர்களில் இலக்கணப் பிழைகளுடன் வந்தால் அவையும் வழு எனப்படும்.
II. சிறு வினா
மூவிடப் பெயர்களைப் பெயர்/வினை எடுத்துக்காட்டுடன் கூறுக
இடம் பெயர் / வினை எடுத்துக்காட்டு
தன்மை தன்மைப் பெயர்கள் நான், யான், நாம், யாம் …
தன்மை வினைகள் வந்தேன், வந்தோம்
முன்னிலை முன்னிலைப் பெயர்கள் நீ, நீர், நீவிர், நீங்கள்
முன்னிலை வினைகள் நடந்தாய், வந்தீர், சென்றீர்கள்
படர்க்கை படர்க்கைப் பெயர்கள் அவன், அவள், அவர்,
அது, அவை…
படர்க்கை வினைகள் வந்தான், சென்றாள், படித்தனர், பேசினார்கள்
பறந்தது, பறந்தன…
III. நெடு வினா
1.வழுவமைதி வகைகளை விவரிக்க
திணை வழுவமைதி
“என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணைவழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.
பால் வழுவமைதி
“வாடா இராசா, வாடா கண்ணா” என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது பால்வழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக, பெண்பால் ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.
இட வழுவமைதி
மாறன் என்பான் தன்னைப்பற்றிப் பிறரிடம் கூறும்போது,“இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்” என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இடவழுவமைதி ஆகும்.
கால வழுவமைதி
குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார். இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழை யாகக் கருதுவதில்லை. ஏனெனில் அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் காலவழுவமைதியாக ஏற்றுக்கொள்கிறோம்.
மரபு வழுவமைதி
“கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதிற் படவேணும்”- பாரதியார். குயில் கூவும் என்பதே மரபு, குயில் கத்தும் என்பது மரபு வழு ஆகும். இங்குக் கவிதையில் இடம்பெற்றிருப்பதால் இது மரபு வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கற்பவை கற்றபின்…
I. கீழ்காணும் தொடர்களின் வழுவமைதி வகைகளை இனம் கண்டு எழுதுக.
அ) அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்
காலவழுவமைதி
ஆ) அவனும் நீயும் அலுவலரைப் பார்க்க ஆயத்தமாகுங்கள்
இடவழுவமைதி
இ) “இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்” என்று கூறினார் –
இடவழுவமைதி
ஈ) சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்
மரபுவழுவமைதி
உ) செல்வன் இளவேலன் இந்தச் சிறுவயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்
திணைவழுவமைதி
II. அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக
1. தந்த “மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா?” என்று சொன்னார். (ஆண்பாற் பெயர்களைப் பெண்பாலாக மாற்றித் தொடரை எழுதுக.)
- தந்தை மகளே உன்னுடைய தோழி அழகியை அழைத்துவா என்று சொன்னார்
2. அக்கா நேற்று வீட்டுக் வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பியது. (வழுவை வழாநிலையாக மாற்றுக.)
- அக்கா நேற்று வீட்டுக்கு வந்தாள். அக்கா புறப்படும் போது அம்மா வழியனுப்பினாள்.
3. “இதோ முடித்து விடுவேன்” என்று செயலை முடிக்கும் முன்பே கூறினார். (வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக.)
- இதோ முடித்தேன் என்று சொல்லை செயலை முடிக்கும் முன்பே கூறினார்
4. அவன் உன்னிடமும் என்னிடமும் செய்திைய இன்னும் கூறவில்லை. (படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படர்க்கையாக மாற்றுக.)
- என்னிடமோ உன்னிடமோ அவன் செய்தியை இன்னும் கூறவில்லை
- உன்னிடமோ என்னிடமோ அவன் செய்தியை இன்னும் கூறவில்லை
- அவன் என்னிடமோ உன்னிடமோ செய்தியை இன்னும் கூறவில்லை
5. குழந்தை அழுகிறான், பார். (வழுவை வழாநிலையாக மாற்றுக.)
குழந்தை அழுகிறது பார்
மொழியை ஆள்வோம்!
I. மொழிபெயர்க்க.
Malar: Devi, switch off the lights when you leave the room.
Devi: Yeah. We have to save electricity.
Malar: Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.
Devi: Who knows? In future our country may launch artificial moons to light our night time sky!
Malar: I have read some other countries are going to launch these types of illumination satellites near future.
Devi: Superb news! If we launch artificial moons, they can assist in disaster relief by beaming light on areas that lost power!
விடை:-
மலர் : தேவி, நீ அறையை விட்டு வெளியே செல்லும் முன் விளக்கை அணைத்து விடு.
தேவி : ஆம், நாம் மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.
மலர் : நம் நாடு தெரு விளக்குகளை எரிய வைப்பதற்கு நிறைய மின்சாரத்தைச் செலவு செய்கிறது.
தேவி : யாருக்குத் தெரியும்? வருங்காலத்தில் நம் நாடு செயற்கை நிலவை நிறுவி இரவில் வானத்தில் விள்க்குகளை எரிய வைக்கலாம்.
மலர் : வருங்காலத்தில் நிறைய நாடுகள் இவ்வகையான செயற்கைக்கோளை நிறுவ இருப்பதாக நான் வாசித்துள்ளேன்.
தேவி : நல்ல செய்தி! நாம் செயற்கை நிலவை றிறுவினால் அது பேரழிவு மற்றும் மின்சாம் இல்லாத சமயத்தில் ஒளியூட்டி நிவாரண உதவிகளை செய்ய வழி செய்கிறது!
II. வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுதல்.
காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?
எல்லா பறவைகளுக்கும் காது உண்டு. செவி துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்றப்படி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறசெவிமடல் இருக்காது. காகத்திற்கு காது உண்டு. காதுக் கேட்கும். பறவைகளுக்கு பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வுக் குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றேக் கூறலாம்.
யுரேகா! யுரேகா! – அறிவியல் வெளியீடு
விடை:-
காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?
எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு. செவித் துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்றப்படி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறச்செவிமடல் இருக்காது. காகத்திற்கு காது உண்டு. காதுக் கேட்கும். பறவைகளுக்குப் பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வுக் குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றேக் கூறலாம்.
யுரேகா! யுரேகா! – அறிவியல் வெளியீடு
III. கொடுக்கப்பட்டுள்ள இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.
அ) இயற்கை – செயற்கை
பாதை தெரியாத இயற்கைக் காடுகளில் பயணிக்கச் செயற்கைக் கருவிகள் பயன்படுகின்றன.
ஆ) கொடு – கோடு
கொடுப்பதும், கொள்வதும் ஒரு எல்லைக்கோடு போன்றதே
இ) கொள் – கோள்
உறவினர்களை அனுசரித்து கொள். கோள் சொல்வதை தவிர்
ஈ) சிறு – சீறு
சிறு பாம்பானாலும் சீறும் குணத்தை கொண்டுள்ளது
உ) தான் – தாம்
தான் என எண்ணாமல் தாம் என் எண்ணுவோம்
ஊ) விதி – வீதி
என் தலைவிதியோ வீதிகளில் கூவி விற்பது என வியாபாரி சலித்தார்.
IV. பத்தியைப் படித்துப் பதில் தருக.
பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக் காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோது நெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக் காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகிய ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.
1. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.
மீண்டும் மீண்டும்
2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது
3. பெய்த மழை – இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
பெய் மழை
4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?
பருப்பொருள்கள் சிதறுதல் (பெரு வெடிப்பு கோட்பாடு)
5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?
நிலம், நீர், காற்று, நெருப்பு
மொழியோடு விளையாடு!
I. தொடரைப் படித்து விடையைக் கண்டறிக.
(சோறு, கற்றல், கரு, பூவில், எழுத்து)
அ) நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் _________
விடை : கற்றல்
ஆ) விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை _________
விடை : கரு
இ) கல் சிலை ஆகுமெனில், நெல் _________ ஆகும்.
விடை : சோறு
ஈ) குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து _________
விடை : எழுத்து
உ) மீன் இருப்பது நீரில்; தேன் இருப்பது _________
விடை : பூவில்
II. குறிப்பைப் பயன்படுத்தி விடைதருக.
குறிப்பு எதிர்மறையான சொற்கள்
மீளாத் துயர் மீண்ட இன்பம்
கொடுத்துச் சிவந்த கொடாமல் கருத்த
மறைத்துக் காட்டு திறந்து மூடு
அருகில் அமர்க தூரத்தில் நிற்க
பெரியவரின் அமைதி சிறியவரின் ஆர்ப்பாட்டம்
புயலுக்குப் பின் தென்றலுக்கு முன்
அகராதியில் காண்க.
அ) அவிர்தல்
ஒளி செய்தல், பீரல், விரிதல், பாடம் செய்தல்
ஆ) அழல்
உட்டணம், எருக்கு, தீ, நெருப்பு, கள்ளி, கேட்டை நாள், கொடுவேலி
இ) உவா
இளமை, இளையோன், கடல், நிறைவு, பூரணை, யானை
ஈ) கங்குல்
இரவு, இருள், பரணி நாள்
உ) கனலி
சூரியன், , கள்ளி, கொடுவேலி, கரியன், நெருப்பு
கலைச்சொல் அறிவோம்
- Nanotechnology – மீநுண்தொழில்நுட்பம்
- Space Technology – விண்வெளித் தொழில்நுட்பம்
- Biotechnology – உயிரித் தொழில்நுட்பம்
- Cosmic rays – விண்வெளிக் கதிர்கள்
- Ultraviolet rays – புற ஊதாக் கதிர்கள்
- Infrared rays – அகச்சிவப்புக் கதிர்கள்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) தன்மை வினைகள் – 1. நடந்தாய், வந்தீர்
ஆ) முன்னிலை வினைகள் – 2. நீர், நீங்கள்
இ) படர்க்கை வினைகள் – 3. வந்தேன் வந்தோம்
ஈ) முன்னிலை பெயர்கள் – 4. வந்தான், சென்றான்
அ) 1, 2, 3, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 1, 4, 2
ஈ) 2, 4, 1, 3
Answer:
இ) 3, 1, 4, 2
2.பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) மருதன் – 1. பலர்பால்
ஆ) பெண்கள் – 2. ஒன்றன்பால்
இ) யானை – 3. ஆண்பால்
ஈ) பசுக்கள் – 4. பலவின்பால்
அ) 4, 3, 1, 2
ஆ) 3, 1, 2, 4
இ) 2, 4, 1, 3
ஈ) 4, 1, 3, 2
Answer:
ஆ) 3, 1, 2, 4
3.பால் என்பது ……………. உட்பிரிவு ஆகும்.
அ) திணையின்
ஆ) திணையின்
இ) காண்டத்தின்
ஈ) படலத்தின்
Answer:
ஆ) திணையின்
4.உயர்திணையின் பிரிவுகள் ………………
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று
5.அஃறிணையின் பிரிவுகள் ………………
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
அ) இரண்டு
6.இடம் ……………….. வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
Answer:
ஆ) மூன்று
7.பொருத்திக் காட்டுக.
i) நான், யான், நாம், யாம் – 1. தன்மை வினைகள்
வந்தேன், வந்தோம் – 2. தன்மைப் பெயர்கள்
iii) நீ, நீர், நீவிர், நீங்க ள் – 3. முன்னிலை வினைகள்
iv) நடந்தாய், வந்தீர், சென்றீர்கள் – 4. முன்னிலைப் பெயர்கள்
அ) 2, 1, 4, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 4, 3,1
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 2, 1, 4, 3
8.பொருத்திக் காட்டுக.
i) அவன் – தன்மை வினை
ii) பறந்தன – 2. முன்னிலை வினை
iii) நடந்தாய் – 3. படர்க்கை வினை
iv) வந்தேன் – 4. படர்க்கைப் பெயர்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 4, 3, 2, 1
9.பொருத்திக் காட்டுக.
i) செழியன் வந்தது – 1. கால வழு
ii) கண்ண கி உண்டான் – 2. இட வழு
iii) நீ வந்தேன் – 3. பால் வழு
iv) நேற்று வருவான் – 4. திணை வழு
அ) 4,3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4,3, 2, 11
10.ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ? பெரியதோ என்று கேட்பது……………….. வழு.
அ) விடை
ஆ) வினா
இ) மரபு
ஈ) கால
Answer:
ஆ) வினா
11.கண்ணன் எங்கே இருக்கிறார் என்ற வினாவிற்குக் கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று கூறுவது ……………. வழு.
அ) பால்
ஆ) வினா
இ) விடை
ஈ) மரபு
Answer:
இ) விடை
12.தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுவது ……………….. வழு.
அ) பால்
ஆ) வினா
இ) விடை
ஈ) மரபு
Answer:
ஈ) மரபு
13.பொருத்திக் காட்டுக.
i) என் அம்மை வந்தாள் – 1. பால் வழுவமைதி
ii) கத்துங் குயிலோசை என்றன் காதில் விழ வேண்டும் – 2. கால வழுவமைதி
iii) குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் – 3. மரபு வழுவமைதி
iv) வாடா ராசா மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது – 4. திணை வழுவமைதி
அ) 4, 3, 2, 1
ஆ) 2, 3, 1, 4
இ) 4, 2, 3, 1
ஈ) 3, 4, 1, 2
Answer:
அ) 4, 3, 2, 1
14.மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, “இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான் என்று கூறுவது ………………
அ) பால் வழுமமைதி
ஆ) திணை வழுவமைதி
இ) இட வழுவமைதி
ஈ) மரபு வழுவமைதி
Answer:
இ) இட வழுவமைதி
15.பொருத்துக.
1. வீரன், அண்ணன், மருதன் – அ) பெண்பால்
2. மகள், அரசி, தலைவி – ஆ) பலர்பால்
3. மக்கள், பெண்கள், ஆடவர் – இ) ஒன்றன்பால்
4. யானை, புறா, மலை – ஈ) ஆண்பால்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
விடை :
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
16.பொருத்துக.
1. நீ வந்தேன் – அ) இட வழாநிலை
2. நீ வந்தாய் – ஆ) இட வழு
3. நேற்று வருவான் – இ) கால வழாநிலை
4. நேற்று வந்தான் – ஈ) கால வழு
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
17.பொருத்துக.
1. என் அம்மை வந்தாள் என்று மாட்டைக் கூறுவது – அ) பால் வழுவமைதி
2. வாடா இராசா, வாடா கண்ணா என மகளைத் தாய் அழைப்பது – ஆ) இடவழுவமைதி
3. இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான் என மாறன் பிறரிடம் சொல்வது இ) கால வழுவமைதி
4. குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் – ஈ) திணைவழுவமைதி
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
No comments:
Post a Comment
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.