தமிழக இளைஞர்களுக்கு சுயதொழில் கடனுதவி – அரசின் சூப்பர் திட்டம்...!

தமிழக இளைஞர்களுக்கு சுயதொழில் கடனுதவி – அரசின் சூப்பர் திட்டம்...!தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க அரசு புதிய திட்டம் ஒன்றை தொடங்கி இருக்கிறது. அதில் இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு திட்டம்

தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் இளைஞர்கள், ஜவுளி, ஆயத்த ஆடைகள் விற்பனை, எலெக்ட்ரிக்கல் கடை, மளிகை கடை, அரிசி கடை, சுவீட் ஸ்டால், செல்போன் விற்பனை, இருசக்கர வாகன உதிரிபாகம் விற்பனை, ஸ்டேசனரி கடை போன்ற பல்வேறு தொழில்களை தொடங்க அரசு கடன் வழங்க இருக்கிறது. அந்த கடனில் 25% மானியமாக வழங்கப்பட இருக்கிறது.


இந்த திட்டத்தில் அதிகபட்சம் ரூ. 3.75 லட்சம் வரை அரசு மானியம் வழங்குகிறது. இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்ட அறிவிப்பில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதன் மூலம் அவர்கள் சமூக பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையும். இதனை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தொழில் செய்ய ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் உள்ள UYEGP விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...