மகளிர் உரிமை தொகைக்கு உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

மகளிர் உரிமை தொகைக்கு உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட சில பள்ளிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மகளிர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த விண்ணப்பப் பதிவுகளில் கொடுக்கப்பட்டுள்ள பயனாளியின் தொலைபேசி எண்ணுக்கு, பதிவு செய்யப்பட்டவுடன் குறுஞ்செய்தி அனுப்படும்.இதனை தொடர்ந்து, உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற இருக்கும் பயனாளிகளின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு ஏற்கப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்ற குறுஞ்செய்தி வரும்.


இதில், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான காரணமும் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒருவேளை விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், இ சேவை மையங்கள் மூலமாக மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் இத்தகைய மேல்முறையீடுகளை மறு விசாரணை செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...