குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி நியமன கவுன்சிலிங், வரும், 20ம் தேதி துவங்கும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
'குரூப் 4' பதவிகளில் காலியாக உள்ள, 10,178 இடங்களை நிரப்ப, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வழியாக, கடந்த ஆண்டு ஜூலை, 24ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.
தற்போது, சான்றிதழ் பதிவேற்றம் செய்தவர்களுக்கு, தரவரிசை அடிப்படையில், பணி நியமன கவுன்சிலிங் தேதி, நேற்று அறிவிக்கப்பட்டது.
கவுன்சிலிங்குக்கு தேர்வு செய்யப்பட்ட, 8,500 பேரின் பதிவெண் பட்டியல், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. கவுன்சிலிங், வரும் 20ம் தேதி துவங்குகிறது
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.