பள்ளி மாணவர்களே., இந்த நாளில் மட்டும் “Bag” தேவையில்லை? கல்வித்துறை அறிவிப்பு!


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் மட்டுமல்லாமல் திறனறிவுகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மாதந்தோறும் கடைசி வேலை நாள், மத்திய அரசின் “பையில்லா தினம்”ஆக கொண்டாடப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த நாளில் மாணவர்கள் தங்களது பாடப்புத்தகம் அடங்கிய பேக்குகளை கொண்டு வர தேவையில்லை. மாறாக நுண்ணறிவு, வினாடி வினா, விளையாட்டு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

Post a Comment

0 Comments