தமிழக பள்ளி பாடத்திட்டங்களில் கொண்டுவரப்பட்ட மாற்றம்.., வெளியான அதிரடி அறிவிப்பு!

தமிழக பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை குறைக்கவும், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும் பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக பள்ளிகளில் உள்ள பாடத்திட்டங்களை ஒவ்வொரு நாளும் மாற்றினால் மாணவர்களின் கற்கும் ஆர்வம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர். அதாவது எந்தெந்த நாட்களில் என்னென்ன பாடங்கள் எடுக்க வேண்டும் என்பதை முறையாக அட்டவணை படுத்த வேண்டும். இத்துடன் ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட ஆசிரியர் மட்டும் பாடம் எடுக்காமல் மற்ற துறை ஆசிரியர்களும் பாடம் எடுத்தால் நன்றாக இருக்கும்

உதாரணமாக ஆங்கில ஆசிரியர், தமிழ் பாடம் எடுத்தால் அது மாணவர்களுக்கு சற்று வித்தியாசத்தை கொடுக்கும். இதே போன்று கணித ஆசிரியர் சமூக அறிவியல் பாடத்தை எடுத்தால் புதுவித வித்தியாசமாக இருக்கும். மேலும் ஒவ்வொரு ஆசிரியரின் கருத்தும் ஒவ்வொன்றாக இருக்கும். இதனால் மாணவர்களின் படிக்கும் ஆர்வமும் அதிகரிக்கும் என கூறியுள்ளனர். மேலும் பாட புத்தகத்தைத் தவிர மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள், வினாடி வினா போன்ற பயிற்சி வகுப்புகளும் நடந்தால் மாணவர்கள் இன்னும் சுறுசுறுப்பாக இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments