நாகை மாவட்டத்தில் மிகவும் பிரபலம் வாய்ந்த கோவில் என்றால் அது சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயில் தான். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த கோவிலில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) திருவிழா நடைபெற இருக்கிறது.இந்த குடமுழுக்கு விழாவில் ஆரம்பமாக கடந்த ஜூலை 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நாளான குடமுழுக்கு விழா நாளை ஜூலை 5ஆம் தேதி காலை 9.45 மணிக்கு நடைபெற இருக்கிறது. எனவே இந்த விழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த திருவிழாவை காண பள்ளிகளுக்கு மட்டும் ஜூலை 5ஆம் தேதி நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக வருகிற ஜூலை 8ம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.