பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு தள்ளிப்போகிறதா???

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு தள்ளிப்போகிறதா???

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைந்தது. இத்தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 79 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. இப்பணியில் ஏறத்தாழ 60 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் மதிப்பெண்களை பதிவேற்றும் செய்யும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது.


இந்நிலையில், நீட் தேர்வு முடிவு வெளியான பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு நாடு முழுவதும் 20 லட்சத்து 87 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து ஒன்றரை லட்சம் பேர் நீட் தேர்வெழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...