அரசு பள்ளிகளில் வேலை செய்ய கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் - நீதிபதி அதிரடி உத்தரவு!



அரசு பள்ளிகளில் வேலை செய்ய இது கட்டாயம் இருக்க வேண்டும் நீதிபதி அதிரடி உத்தரவு

அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு, வகுப்பறை உள்ளிட்டவை தனியார் பள்ளிக்கு நிகராக மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் தூய்மை பணி மேற்கொள்ள ஆட்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கியுள்ளது
இதில் கடுமையான நிபந்தனைகள் வழங்கப்பட்டிருந்ததால் அந்நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், “அரசு பள்ளிகளில் தூய்மை பணியாளர்களுக்கு தமிழ் தெரியாமல் இருந்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். எனவே ஒப்பந்ததாரர்கள் தமிழ் மொழி தெரிந்தவரை தான் பணி நியமனம் செய்ய வேண்டும்.” என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர்.இந்த உத்தரவு பொதுமக்கள் உள்ளிட்ட பலரின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Post a Comment

0 Comments