இனி பள்ளிகள் காலை 7 மணிக்கு தொடங்கும் – அரசின் அதிரடி உத்தரவு...!!!!

 இனி பள்ளிகள் காலை 7 மணிக்கு தொடங்கும் – அரசின் அதிரடி உத்தரவு...!!!!

நடப்பு கோடை காலத்தில் வெப்ப அலை தீவிரமாக இருப்பதால், பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகள் செயல்படும் நேரம்:

கோடை காலத்தில் நிலவும் அதிக வெப்பத்தால் குழந்தைகள் அதிகம் பாதிக்கும் நிலை வந்து விடக்கூடாது என்று தான் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை காலத்தில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால், குழந்தைகள் பெற்றோரின் நேரடி கண்காணிப்பில் பாதுகாப்பாக இருக்க உதவியாக உள்ளது. நடப்பு கோடை காலத்தில் வழக்கத்தை விடவும், வெயில் அதிகமாகவும், வெப்பநிலை கடுமையான அளவு உயர்ந்தும் உள்ளது.

மேலும், வெப்ப அலை இதேபோல் இனி வரும் நாட்களிலும் அதிகமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், குழந்தைகளின் நலன் கருதி, ஜார்கண்ட் மாநிலத்தில் ஏப்ரல் 19ம் தேதியான இன்று முதல் 25ம் தேதி வரை மழலையர் பள்ளி முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், 6ம் வகுப்பு முதல் உள்ள மாணவர்களுக்கு பிற்பகல் வரை வகுப்புகள் நடக்கும் என்றும் கல்வித்துறையின் உத்தரவுகள் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments