தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளி மாணவர்கள் 11ம் வகுப்பு மற்றும் கல்லூரியில் எந்த பாட பிரிவை தேர்வு செய்யலாம் என்று மாணவர்களுக்கு உதவுவதற்காக உயர்கல்வி வழிகாட்டுதல் குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது.
உயர்கல்வி உதவிக்குழு:
தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவுவதற்காக பல்வேறு முயற்சிகளையும் செய்து வருகிறது. பள்ளி மாணவர்கள் இடைநிற்றல், உதவித்தொகை போன்ற பல திட்டங்களின் மூலம் பலனடைந்து வருகின்றனர். இந்நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் முடிந்துள்ளது. இந்த மாணவர்கள் தங்கள் வாழ்வை தீர்மானிக்கும் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அதாவது 10ம் வகுப்பு முடித்தவர்கள் 11ம் வகுப்பில் தேர்வு செய்யும் பாடங்களை பொறுத்து தான் கல்லூரியில் படிக்கும் துறையை தேர்வு செய்ய முடியும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இது குறித்த விழிபுணர்களை பெற்றுள்ளனர். ஆனால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் அதிலும் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வுகள் எதுவும் இல்லை.
இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வை அளிக்க அனைத்து பள்ளியிகளிலும் தலைமை ஆசிரியர் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான இணையதள இணைப்பையும் அதிகாரதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.