மாவட்ட வாரியாக சிறந்த 3 அரசு பள்ளிகளை தேர்வு ..செய்ய உத்தரவு...!!!

 மாவட்ட வாரியாக சிறந்த 3 அரசு பள்ளிகளை தேர்வு ..செய்ய உத்தரவு...!!!

தொடக்க கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை கல்வி பணியில் முன்னேற்றம் அடையச் செய்யும் விதமாக ஆண்டுதோறும் மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து, மாவட்ட வாரியாக சுழற்கேடயங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 2021-22-ம் கல்வி ஆண்டில் 114 பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, 2022-23-ம் கல்வி ஆண்டில் சிறந்தபள்ளிகளை தேர்வு செய்ய அந்தந்த மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் தலைமையில் 5 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் இக்குழுவினர் ஆய்வு செய்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொண்ட முயற்சி, உள்கட்டமைப்பு வசதி உள்ளிட்ட 15 பிரிவுகளில் தலா 10 மதிப்பெண் என 150 மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும்.

இதில் 135 முதல் 150 வரை, 112 முதல் 135 வரை, 112-க்கு கீழ் என 3 பிரிவுகளில் தர மதிப்பீடு வழங்கி, சிறந்த 3 அரசுப் பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும். இப்பணிகளை துரிதமாக முடித்து, பரிந்துரை பட்டியலை வரும் ஏப்.26-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...