#காதலே_என்_காதலே
நித்தமும் போராடும்
வாழ்வான போதும்
மொத்தமும் நீயாகி
என்னை ஆள்கின்றாயே
சித்தம் முழுவதும்
நிறைந்து வாழ்கின்றாயே . . .
ஏற்றங்கள் இல்லாத
மாற்றங்கள் வந்தாலும்
எப்போதும் என்னோடு
துணையாக நிற்கின்றாயே
ஆதரவாய் தோள்சாய்த்து
அரவணைத்துக் காக்கின்றாயே . . .
ஓரவிழிப் பார்வையில்
ஓராயிரம் கதைசொல்லி
ஓரவஞ்சனை ஏதுமின்றி
என்னுள் உறைகின்றாயே
ஊனோடு உயிராகி
எனக்காகவே வாழ்கின்றாயே . . .
நமக்கான நேரங்கள்
அரிதாகிப் போனாலும்
கிடைக்கின்ற பொழுதுகளில்
இன்பத்தைத் தருகின்றாயே
வாஞ்சையுடன் வந்தேதான்
வசந்தத்தைப் பெருகின்றாயே . . .
சிலநேரம் துன்பங்களால்
துவண்டு நான் போனாலும்
துயர் துடைக்கும் தூயவனாய்
கரம் கோர்த்து கொள்கின்றாயே
மனம் மயக்கும் மாயவனாய்
மந்திரம் செய்து வெல்கின்றாயே . . .
கால் முளைத்த சூரியனே
காலமெல்லாம் தீராத
காதல் கொள்ளவா இல்லை
அழகுக் கன்னி நிலவாகி
உன்னை அணைத்துக் கொள்ளவா
சொல்லடா யென் மாயக்கண்ணா . . .
*ரேணுகா ஸ்டாலின்*
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.