CTET ஜூலை 2023 தேர்வுக்கான பதிவு தொடக்கம் – விண்ணப்பிக்கும் வழிமுறைகள் தெரியுமா?

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு 2023 ஜூலைக்கான பதிவுகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான எளிய வழிமுறைகள் குறித்து கீழே விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

CTET ஜூலை 2023:

மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் அனைவரும் CTET தேர்வு மூலமாக நியமனம் செய்யப்படுகின்றனர். இத்தேர்வு ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. CTET தேர்வில் 2 தாள்கள் உள்ளது. தாள் 1 தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலும், தாள் 2 தேர்ச்சி அடைபவர்கள் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலும் ஆசிரியர்களாக பணிபுரியலாம்.

CTET தேர்வில் அனைத்து கேள்விகளும் MCQ வகையில் தான் இருக்கும். CTET ஜூலை 2023 தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் 27ம் தேதியான இன்று முதல் தொடங்குகிறது. மே 26, 2023 வரை விண்ணப்ப பதிவுகள் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மே 27,2023 வரை விண்ணப்ப கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CTET ஜூலை 2023 விண்ணப்ப பதிவு செயல்முறை:

முதலில், CBSE CTET ன் அதிகாரபூர்வ தலமான ctet.nic.in க்கு செல்ல வேண்டும்.

CTET ஜூலை 2023 பதிவு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்பொழுது, திறக்கும் புதிய பக்கத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்ப பதிவு முடிந்த உடன் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இப்பொழுது, சமர்ப்பி என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

எதிர்கால தேவைக்காக பிரதி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Official NOTIFICATION Click here

Qualification and Syllabus Click Here


Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support