கடனை வாங்கி அடைக்க முடியாமல் தினம் தினம் தவிப்பவர்கள், ஏழு கிராம்பை இப்படி மட்டும் வைத்து விடுங்கள் போதும்.....

 

 கடல் போன்ற கடன் பிரச்சனையும் காணாமல் போக கூடிய அற்புத பரிகாரம். -இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு கூட கடன் என்ற வார்த்தையின் அர்த்தம் புரியும். இந்த அளவிற்கு கடனானது பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து நிற்கிறது. இந்த கடனை நாம் தீர்க்க எத்தனையோ வழிகளில் போராடினாலும் சில நேரங்களில் நாம் வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் திணறுவது உண்டு. அப்படியான கடனை அடைக்க இந்த கிராம்பு பரிகாரம் செய்தால் போதும் என்று ஆன்மீகம் சொல்கிறது. அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். முதலில் இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

 இந்த கடனை நம்முடைய அவசர தேவைக்கு வேறு வழியில்லாமல் வாங்கி இருந்தால் இது போன்ற பரிகாரங்கள் மூலம் அதை அடைப்பதற்கான வழி தேடி கொள்ளலாம். ஆனால் நாம் ஆடம்பரமாக வாழ்வதற்கோ வீண் செலவுகளுக்காக பணத்தை கடன் வாங்கி இருந்தால் நீங்கள் இன்னும் இது போல எத்தனை பரிகாரங்களை செய்தாலும் அதில் பலன் இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். -

  கடன் தீர கிராம்பு பரிகாரம்

 இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை காலை 3:30 மணி முதல் 8:30 மணிக்குள்ளாக செய்து விட வேண்டும். இதற்கு முதல் நாளே அதாவது வியாழக்கிழமை மாலையில் பூஜை அறையை சுத்தம் செய்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலையில் குளித்து முடித்து விட்டு, மகாலட்சுமி தாயாருக்கு வாசனை மிகுந்த மலரால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். தாயாரின் படத்திற்கு முன்பாக நெய் தீபம் ஒன்றை ஏற்றி வைத்து விடுங்கள். அடுத்து ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் ஏழு கிராம்பு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கிராம்பு உடையாத நல்ல கிராம்பாக இருக்க வேண்டும். அதன் பிறகு இந்த கிராம்பிற்கு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை முடித்துக் கொள்ளுங்கள். இந்த கிராம்பு அந்த மஞ்சள் துணியில் வெள்ளிக்கிழமை முழுவதும் பூஜை அறையிலேயே இருக்கட்டும். அன்று இரவு இந்த கிராம்புடன் சேர்ந்த மஞ்சள் துணியை கைகளில் வைத்துக் கொண்டு மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்து உங்களுக்கு இருக்கும் கடன் சுமை அனைத்தையும் சொல்லி இது எனக்கு தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த கிராம்பை மஞ்சள் துணியில் மூட்டையாக கட்டி வைத்து விடுங்கள். இதை முடிச்சு போடுவதற்கும் மஞ்சள் நிற நூலையே பயன்படுத்துங்கள். - - இந்த மூட்டையை இரவு உறங்கும் போது உங்களின் தலையணை அடியில் வைத்து விட்டு உறங்கி விடுங்கள்.
 அடுத்த நாள் சனிக்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்து பிறகு இந்த மூட்டையை, வீட்டின் அருகில் உள்ள அரச மரத்தின் கிளையில் கொண்டு கட்டி விட வேண்டும். ஒரு வேளை கிளையில் கட்ட முடியவில்லை என்றால் மரத்தின் அடிப்பாகத்தில் இந்த முடிச்சை வைத்து விடுங்கள். அவ்வளவு தான் இந்த பரிகாரம் முடிந்தது. இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்களுக்கு இருக்கும் கடன் தொல்லை விரைவில் அடைவதற்கான வழியை மகாலட்சுமி தாயார் காட்டுவார் என்று சொல்லப்படுகிறது. 

சனிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயார் விஷ்ணு பகவானோடு அரச மரத்தடியில் வாசம் செய்வார் என்பது ஐதீகம். அன்றைய நாளில் நம்முடைய இந்த வேண்டுதல் முடிச்சினை செலுத்தும் பொழுது நிச்சயம் அதற்கான பலன் அதிகம். இதையும் படிக்கலாமே: இந்த 2 பொருட்கள் ஒன்றாக சேர்ந்து இருக்கும் வீட்டில் பணக் கஷ்டம் கட்டாயம் வராது. பஞ்சத்தை விரட்டி அடிக்கும் அந்த ரகசிய பொருள் என்னவாக இருக்கும்? இந்த பரிகாரத்தை செய்த பிறகு கடன் அடைக்க நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் விரைவில் கைக்கூடி உங்களின் முழு கடனும் அடைவதோடு, நீங்கள் யாருக்கேனும் கடன் கொடுத்து அது திரும்ப வராத பட்சத்தில் இதே போன்ற பரிகாரத்தை அதற்கும் செய்யலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

Follow this Link - உடனடி கல்விச் செய்தி

Loading...