பள்ளியில் ஆப்சென்டான மாணவர்களுக்கு எச்சரிக்கை ! கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்ததையடுத்து, 9 வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறை கொண்டாடி வருகின்றனர். ஆனால், பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி உள்ள மாணவர்கள், தேர்வு முடிவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வி துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது, நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முதல் மொழி தேர்வுக்கு 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் ஆப்சென்ட்டாகி இருந்தனர். இதற்கு, ஆப்சென்டான மாணவர்கள் நீண்ட நாட்களாக பள்ளி வருவதே இல்லை என பல்வேறு பள்ளிகள் கூறி இருந்தனர்.

இதையடுத்து, நீண்ட நாட்களாக, பள்ளிக்கு வராத மாணவர்களுக்கான முழு லிஸ்ட்டையும் வரும் மே 2 ஆம் தேதிக்குள் பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த மாணவர்கள் பள்ளிக்கு வராத காரணத்தையும், அதற்காக பள்ளி நிர்வாகம் செய்த நடவடிக்கையும் சேர்த்து சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இனி வரும் கல்வியாண்டில் இது போன்ற, ஆப்சென்ட்டிஸ் இருக்க கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments