சம்பாதிக்கும் பணம் பல மடங்கு பெருகிக் கொண்டே செல்ல இந்த எளிமையான வழி .....

 சம்பாதிக்கும் பணம் பல மடங்கு பெருகிக் கொண்டே செல்ல இந்த எளிமையான ஏழு விஷயங்களை கடைப் பிடித்தால் போதும். ஒரு ரூபாய் சம்பாதித்தாலும் அது பல ரூபாயாக நிச்சயம் பெருகிக் கொண்டே செல்லும்.அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் எல்லாருக்கும் இவ்வுலகம் இல்லை என்ற திருவள்ளுவரின் கூற்றுக்கேற்ப பணம் இல்லாமல் இந்த உலகத்தில் வாழ முடியாது என்பது நிதர்சனமான உண்மை அந்த பணத்தை பல மடங்கு பெருக்க எண்ணற்ற பரிகாரங்கள் இருந்தாலும் கூட நாம் அன்றாட வாழ்வில் செய்யும் சில விஷயங்களால் பண ஈர்ப்பு ஏற்பட்டு ஒரு ரூபாய் வருமானம் வந்தால் கூட அது பல மடங்கு பெருகும் வாய்ப்பு அதிகம். அது என்ன மாதிரியான பரிகாரங்கள் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பணம் சேர எளிமையான ஏழு பரிகாரங்கள் இந்த பரிகாரம் அனைத்துமே நாம் ஒரே ஒரு பொருளைக் கொண்டு தான் செய்யப் போகிறோம்.


 அது வேறு ஒன்றும் இல்லை மகாலட்சுமி தாயாரின் பிறந்த வீட்டு பொருளான கல் உப்பை வைத்து தான் செய்யப் போகிறோம். செல்வத்தை வாரி வழங்குபவர் மகாலட்சுமி தாயார் அவரின் பிறந்த வீடான கடலில் இருந்து தோன்றிய இந்த கல்லுப்பிற்கும் அதே தன்மை இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பரிகாரங்களும் இந்த உப்பை வைத்து தான் இப்போது நாம் செய்யப் போகிறோம். வருமானம் உங்கள் கையில் வந்த உடனே அதில் எந்த வித செலவு செய்யாமல் அந்த பணத்தை நேரடியாக கொண்டு வந்து ஒரு மண் குடுவையில் முழுவதுமாக கல் உப்பை நிரப்பி அதில் வைத்து விடுங்கள். இந்த கல்லுப்பு வீட்டில் இருந்து எடுத்து பயன்படுத்த கூடாது. புதிதாக கடையில் இருந்து வாங்கி வந்த கல்லுப்பாக இருக்க வேண்டும். அடுத்தது இந்த கல் உப்பை ஒரு சிறிய கவரில் சேர்த்து முடிச்சாக கட்டி நீங்கள் பணம் வைக்கும் பீரோவில் எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலமும் பணவரவு அதிகரிக்கும். இதே போல உங்களுடைய மணிப் பர்சிலும் கூட ஒரு சிறிய கவரில் கல் உப்பை போட்டு வைத்து விடுங்கள்.


 தொழில் செய்பவராக இருந்தால் வியாபாரம் செய்யும் இடத்தில் கட்டாயமாக இப்படி ஒரு சிறிய கல் உப்பு மூட்டையை வைத்து விடுங்கள். பணப் புழக்கம் தாராளமாக இருக்கும் வியாபாரம் பெருகும். இதே போல வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் கல் உப்பை நிரப்பி வைத்து விடுங்கள். இதன் மூலம் வீட்டில் இருக்கும் நெகட்டிவிட்டி அனைத்தையும் இந்த கல்லுப்பு ஈர்த்து வீட்டில் நல்ல பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிப்பதன் மூலம் பணவரவு அதிகரிக்கும். இதே போல் நாம் எந்த செலவிற்காக பணத்தை கொடுப்பதாக இருந்தாலும் குறிப்பாக வாடகை அல்லது கடன் கொடுப்பது போன்றவற்றை செய்வதற்கு முன்பாக பணத்தை கல் உப்பில் வைத்த பிறகு கொடுத்தால் அந்த பணம் ஏதேனும் ஒரு வகையில் திருப்பி நமக்கு வரும். சம்பாதிக்கும் பணம் பலமடங்கு பெருகவும் நம்மிடம் இருந்து செல்லும் பணம் திரும்பி பல மடங்காக கிடைக்கவும் பணம் எப்பொழுதும் கையில் தாராளமாக புழங்கவும் இந்த கல்லுப்பை வைத்து செய்யப்படும் ஏழு பரிகாரங்களை தொடர்ந்து செய்தால் போதும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்கள் செய்து பார்த்து பலனடையலாம்

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...