அன்று முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பம் – கல்வித்துறை உத்தரவு!

அனைத்து வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும் இறுதி தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோடை விடுமுறை:

2022 – 2023ம் கல்வி ஆண்டு தான் கிட்டத்தட்ட 2, 3 ஆண்டு கொரோனா கால ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு பிறகு பிறகு முழுவதுமாக நடந்துள்ளது. இதனால் மாணவர்கள் ஆரம்பம் முதலே, மிகவும் ஆர்வமாக தான் பள்ளிக்கு சென்று வந்தனர். வழக்கம் போல், இறுதி தேர்வுக்கான அட்டவணைகள் முன்னதாக வெளியிடப்பட்டு, திட்டமிட்டபடி தேர்வுகள் நடந்து வருகின்றது.

ஆனால் இந்த வருடம் கோடை கால வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனால் அனைத்து பள்ளிகளிலும் கோடை விடுமுறை முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ஒடிசா மாநிலத்தில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால், ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் உதவிபெறும் பள்ளிகளிலும் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 21) முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து கல்வித்துறை விரைவில் அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில்:

10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்த நிலையில். 1 முதல் 9 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆண்டு இறுத்தித் தேர்வு தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தேர்வுகள் ஏப்ரல் 28 உடன் முடிவடைவதால் .ஏப்ரல் 28 கடைசி வேலை நாளாகும் .ஏப்ரல் 29 முதல் தமிழகத்தில் கோடை விடுமுறை தொடங்குகிறது.மீண்டும் பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரியவருகிறது.

12th Result - Date Click here

Post a Comment

0 Comments