எண்ணும் எழுத்தும் ’ பயிற்சியின் போது ஆசிரியைகளை அவதுாறாக பேசிய BEO இடமாற்றம்.!


அயோத்தியாப்பட்டணம் வட்டார கல்வி அலுவலர் , பெத்தநாயக்கன்பாளை யத்துக்கு இடமாற்றப்பட்டார். சேலம் மாவட்டத்தில் , அயோத்தியாப்பட்டணம் வட்டாரக் கல்வி அலுவலராக இருந்தவர் ஜெயலட்சுமி . இவர் , ' எண்ணும் எழுத்தும் ’ பயிற்சியின் போது ஆசிரியைகளை அவதுாறாக பேசியதாக தொடக்க கல்வி ஆசிரியர் மன்றம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. 

இதன்படி , மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் விசாரித்து , அறிக்கையை தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பினார். இதையடுத்து புகாருக்குள்ளான ஜெயலட்சுமி , பெத்த நாயக்கன்பாளையம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலராக நிர்வாக மாறுதல் செய்யப்பட்டார்.


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...