டைம்பாஸ்_கிறுக்கல் - புதுக்கவிதை!

#டைம்பாஸ்_கிறுக்கல்


இந்த மாதத்தில் மட்டும்

ஏழெட்டு முறை

ஜாதகத்தை பார்த்தேன் 

அதன் பயனாய் சாதகமாக 

செவிகளில் விழுந்த வார்த்தைகள் 

தொட்டதெல்லாம் துலங்கும் . . .


இதுவரையான என் 

ஒட்டுமொத்த வாழ்நாளிலும், 

இதுபோல் ஓராயிரம் முறை 

பார்த்து இருக்கிறேன் 

ஒவ்வொரு முறையும் 

தொட்டதெல்லாம் துலங்கும் 

தொட்டதெல்லாம் துலங்கும்

இவ்வார்த்தைகள் தான் 

என் செவிகளை வருடி 

மனதுள் வியாபித்திருந்தது . . .

 

ஆயினும், 

என்னவோ!! தெரியவில்லை

எட்டுத் திக்கிலும் 

எங்கெங்கு சென்றாலும் 

தோல்வியின் துரத்தல்கள் 

ஜான் ஏற முழம் வழுக்கும் 

வாழ்க்கை . . .

காலம் கடந்து இப்போது புரிந்தது

அவ்வார்த்தைகள் யாவும் 

நம்பிக்கையோடு வாழ்வைத் 

தொடர்ந்து, அயர்ச்சியில்லா 

முயற்சியோடு வாழ்வின் 

தடைக் கற்களை தகர்த்தெறிந்து 

முன்னேறுவதற்கான

படிக்கற்களை அமைத்துக்‌ 

கொள்ளும் சூத்திரம் என்று . . .


பரவாயில்லை . . .

இப்போதாவது புரிந்ததே

பெருமூச்சுடன் தொடர்கிறேன்

இனி என் முன்னேற்றத்தைத்

தடுக்க எவராலும் முடியாது

என்னை வெல்ல எமனாலும் 

முடியாது . . .


(பலரும் உணர்ந்த உண்மை)


        *ரேணுகா ஸ்டாலின்*

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...