#உலக_புத்தக_தினம்
மனிதனுள்
மறைந்திருக்கும்
மனிதத்தை
தட்டியெழுப்பும்
தனியொருவன்
புத்தகம் . . !
விஞ்ஞான
வளர்ச்சியையும்
மெய்ஞான
புரிதலையும்
அழகாக
எடுத்துரைக்கும்
அன்பாளன்
புத்தகம் . . !
காதலின்
மகத்துவத்தை
வெற்றுக்
காகிதத்தில்
அச்சிலேற்றி
இரவு பகல் பாராது
நம் அரவணைப்பில்
அகலாதிருக்கும்
வசியக்காரன்
புத்தகம் . . !
பண்டைய
கலாச்சாரம் போற்றி
பண்பாடு வளர்த்து
பாசம் மாறா
பண்போடு வாழ
பாடம் சொல்லும்
பண்பாளன்
புத்தகம் . . !
அகிம்சாவாதி
காந்தியையும்
புரட்சியாளன்
நேதாஜியையும்
அறிந்து கொள்ள
அரிச்சுவடியாகி
நம்முன் நிற்பவன்
புத்தகம் . . !
மனிதன்
கண்டுபிடிப்புகளில்
மைல் கல்லாய் வந்து
மகத்துவம் கண்ட
மாயவன்
புத்தகம் . . !
குழந்தைகள் முதல்
பெரியவர் வரை
அனைவர் பார்வையிலும்
பாரபட்சமின்றி
நிறைந்திருந்து
நன்மை புரியும்
நல்நண்பன்
புத்தகம் . . !
என் விழியீர்ப்பில்
விலகாமலிருந்து
விரல் தீண்டலில்
சுகம் காணக்
காத்திருக்கும்
என்னுயிர்க்
காதலன் புத்தகம் . . !
வாசிப்பின்
உன்னதம்
உணர்ந்து
வாசிப்பை நேசிப்பவன்
வாழ்வில் என்றும்
தோற்பதில்லை . . !
#உலக_புத்தக_தினம்_நல்வாழ்த்துகள்
*ரேணுகா ஸ்டாலின்*
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.