TN 10th Tamil Assignment Answer key 2021 , TNSCERT kalvi tv Assignment

TN 10th Tamil Assignment Answer key 2021 , TNSCERT kalvi tv Assignment 

Students can Download 10th  Assignment Answers and Question paper unit 1.Tamil medium and English Medium PDF download..

TNSCERT 10th Tamil Assignment PDF Download with answer Tamil Medium , English Medium 

TN 10th  Tamil Assignment  Question paper ,answer key

10th Tamil Assignment Answer - unit 1

  பகுதி -1

I)சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

  1தென்னன் மகளே - இத்தொடரில் தென்னன் என்ற சொல் குறிக்கும் மன்னன் யார் ?

  அ. சேரன்

  ஆ, சோழன்

  இ.பாண்டியன்

  ஈ பல்லவன்

  விடை : இ.பாண்டியன்

  2. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

  அ. கால்டுவெல்

  ஆ. மாக்ஸ்முல்லர் 

  இ. சு. அப்பாத்துரை

  ஈ. தேவநேயபாவாணர்

  விடை : அ. கால்டுவெல்

  3. 'மெத்த வணிகலன்" என்னும் தொடரில் தமிழழகன் குறிப்பிடுவது யாது?

  அ. வணிகக்கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

  ஆ .பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

  இ.ஐம்பெரும்காப்பியங்களும்,அணிகலண்களும்

  விடை : அ. வணிகக்கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

  4.பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?

  அ.இளங்குமரனார்

  ஆ. வேதாசலம்

  இ. விருத்தாசலம்

  ஈ.துரை மாணிக்கம்

  விடை : ஈ.துரை மாணிக்கம்

  5. பாவாணர் நூலகத்தை உருவாக்கியவர் யார்?

  அ. பெருஞ்சித்திரனார்

  ஆ.திரு.வி.க

  இ. அப்பாத்துரையார்

  ஈ.இளங்குமரனார்

  விடை: ஈ.இளங்குமரனார்

  6.கரும்பின் நுனிப்பகுதி எவ்வா ழைக்கப்படுகிறது?

  அ. கட்டை

  ஆ. கொழுந்தாடை

  இ.செம்மல்

  ஈ.துரை மாணிக்கம்

  விடை : ஆ. கொழுந்தாடை

  7. நெல், புல் முதலான தானியங்களுக்கு வழங்கப்படும் சொல் என்ன?

  அ. தாள்

  ஆ. கூலம்

  இ சண்டு

  ஈ.சருகு

  விடை : அ.தாள்

  8.இரட்டுற மொழிதலின் வேறு பெயர் யாது?

  அ.பிறிதுமொழிதல்

  ஆ. உவமை

  இ.சிலேடை

  ஈ.தனிமொழி

  விடை : இ.சிலேடை

  9. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ?

  அ. பத்து

  ஆ ஆறு

  இ.ஐந்து

  ஈ.ஒன்பது

  விடை : அ. பத்து

  10. செய்யுளிசை அளபெடையின் மற்றொரு பெயரைத் தருக.

  அ.ஒற்றளபெடை

  ஆ. உயிரௌபெடை

  இ.இன்னிசையனடை

  ஈ. சொல்லிசை அளபெடை

  விடை : இசைநிறை அளபெடை
  குறிப்பு : நான்கு விடைகளும் தவறு

II. குறுவினா

  11. தமிழக்கும். கடலுக்குமான இரட்டுறமொழியும் தன்மையை குறிப்பிடுக.

  12. தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கும் வழங்கும் சொற்களைத் தருக.

  Answer:

  (பூம்பிஞ்சு -பூவோடு கூடிய இளம்பிஞ்சு, பிஞ்சு – இளம்காய்)

  • வடு – மாம்பிஞ்சு
  • இளநீர் – முற்றாத தேங்காய்
  • மூசு – பலாப்பிஞ்சு
  • நுழாய் – இளம்பாக்கு
  • கவ்வை – எள் பிஞ்சு
  • கருக்கல் – இளநெல்
  • குரும்பை – தென்னை, பனை பிஞ்சு
  • கச்சல் – வாழைப்பிஞ்சு

  13.தேவநேயப்பாவாணர்  குறிப்பு வரைக.

  Answer : 

  • பெயர் : தேவநேயப் பாவாணர்
  • சிறப்புப்பெயர் : மொழிஞாயிறு
  • படைப்புகள் : இலக்கணக் கட்டுரைகள், மொழியாராய்ச்சிக் கட்டுரைகள், சொல்லாய்வுக் கட்டுரைகள்.
  • பணி : செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநர், உலகத் தமிழ்க் கழகத் தலைவர்

  14.இணை ஒப்பு என்று கூறப்படுவது யாது? ( update soon)


  15. விகுதி பெற்ற தொழிற்பெயர் என்றால் என்ன?
  Answer:

  • வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்.
  • சான்று: நடத்தல். நட – வினையடி, தல் – விகுதி.

  பகுதி - இ

  III. நெடுவினா

  16. அன்னை மொழியின் புகழை பெருஞ்சித்திரனார் எவ்வாறு எடுத்துரைக்கிறார்?

  • அன்னை மொழியே! அழகான செந்தமிழே!
  • பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே!
  • குமரிக்கண்டத்தில் நிலைபெற்று அரசாட்சி செலுத்திய மண்ணுலகப் பேரரசே!
  • பாண்டியனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே!
  • பாட்டும், தொகையும் ஆனவளே! பதினெண்கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகானமணிமேகலையே!
  • கடல் கொண்ட குமரியில் நிலையாய் நின்று அரசாட்சி செய்த பெருந்தமிழ் அரசே!
  • பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து தமிழே உன்னை வாழ்த்துகின்றோம்

  17. தமிழ் சொல்வளமுடையது, தமிழ்நாடு பொருள் வளமுடையது கூற்றை விளக்குக.
  முன்னுரை:
  • தமிழ், சொல் வளமுடையது, தமிழ்நாடு பொருள் வளமுடையது என்பதைப் பாவாணர், சொல்லாய்வுக் கட்டுரைகள் என்ற நூலில், ‘தமிழ்ச் சொல்வளம்’ என்னும் கட்டுரையில் எடுத்துரைக்கிறார்.

  தாவரங்களின் அடிப்பகுதிப் பெயர்:

  • தாள் – நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
  • தண்டு – கீரை, வாழையின் அடி
  • கோல் – நெட்டி, மிளகாய்ச் செடியின் அடி
  • தூறு- குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
  • தட்டு (அ) தட்டை – கம்பு, சோளம் முதலியவற்றின் அடி
  • கழி – கரும்பின் அடி
  • கழை – மூங்கிலின்
  • அடி – புளி, வேம்புவின் அடி

  அடிப்பகுதிபிரிவு பெயர்:

  • கவை – மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை
  • கொம்பு (அ) கொப்பு – கவையின் பிரிவு
  • கிளை – கொம்பின் பிரிவு
  • சினை – கிளையின் பிரிவு
  • போத்து – சினையின் பிரிவு
  • குச்சி – போத்தின் பிரிவு

  இணுக்கு – குச்சியின் பிரிவு
  தாவர இலைப் பெயர்:

  • புளி, வேம்பு – இலை
  • தென்னை – பனை
  • நெல், புல் – தா ள்
  • காய்ந்த இலை – சருகு
  • சோளம், கரும்பு – தோகை

  தாவரங்களின் பிஞ்சுவகைப் பெயர்:

  • (பூம்பிஞ்சு -பூவோடு கூடிய இளம்பிஞ்சு, பிஞ்சு – இளம்காய்)
  • வடு – மாம்பிஞ்சு
  • இளநீர் – முற்றாத தேங்காய்
  • மூசு – பலாப்பிஞ்சு
  • நுழாய் – இளம்பாக்கு
  • கவ்வை – எள் பிஞ்சு
  • கருக்கல் – இளநெல்
  • குரும்பை – தென்னை, பனை பிஞ்சு
  • கச்சல் – வாழைப்பிஞ்சு
  • தாவரங்களின் குலைப் பெயர்:
  • கொத்து – அவரை, துவரை
  • கதிர் – கேழ்வரகு, சோளக் கதிர்
  • குலை – கொடி முந்திரி
  • அலகு (அ) குரல் – நெல், தினைக் கதிர்
  • தாறு – வாழைக்குலை
  • சீப்பு – வாழைத் தாற்றின் பகுதி


  கெட்டுப்போன காய், கனிப்பெயர்:

  • சூம்பல் – நுனியில் சுருங்கிய காய்
  • சிவியல் – சுருங்கிய பழம்
  • சொத்தை – புழுபூச்சி அரித்த காய் (அ) கனி
  • வெம்பல் – சூட்டினால் பழுத்த பிஞ்சு
  • அளியல் – குளுகுளுத்த பழம்
  • அழுகல் – குளுகுளுத்து நாறிய பழம் (அ) காய்
  • சொண்டு – பதறாய்ப் போன மிளகாய்
  • கோடான்காய் (அ) கூகைக்காய் – கோட்டான் அமர்ந்ததினால் கெட்ட காய்
  • தேரைக்காய் – தேரை அமர்ந்ததினால் கெட்டகாய்
  • அல்லிக்காய் – தேரை அமாந்ததினால் கெட்ட தேங்காய்
  • ஒல்லிக்காய் – தென்னையில் கெட்ட காய்

  முடிவுரை:
  • மேற்குறித்த பெயர்கள் மூலம், தமிழின் சொல்வளத்தையும் தமிழ்நாட்டின் பொருள் வளத்தையும் நன்கு அறிய முடிகின்றது.

  Sand Your Study Materials To Our Email ID kalvikavi.blog@gmail.com
  இந்த பயனுள்ள பக்கத்தை உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள்

மேலே உள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்து உங்களுக்கான வினாக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

1 Comments

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...