ஜூன் 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

ஜூன் 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

பத்திரிகை செய்தி

பொது (பல்வகை) துறை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணை எண்.154 பொது (பல்வகை)த் துறை நாள்: 03.09.2020-ன்படி, இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், ஏர்வாடி கிராமத்தில், ஏர்வாடி தர்ஹாவில் அமைந்துள்ள அல்குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹிம் ஷாஹித் ஒலியுல்லா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 24.06.2022 அன்று வெள்ளி கிழமை ஒருநாள் மட்டும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் "உள்ளூர் விடுமுறை" யாகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு 02.07.2022 அன்று சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்படுகிறது.

ஜூன் 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு
ஜூன் 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், 24.06.2022 வெள்ளி கிழமை அன்று இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவிக்கப்படுகிறது. 

வெளியீடு:செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், இராமநாதபுரம்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...