Daily TN Study Materials & Question Papers,Educational News

RTE Admission 2023-24 - தனியார் பள்ளிகளில் இலவசமாக கல்வி பெற வேண்டுமா?

RTE Admission 2023-24 - தனியார் பள்ளிகளில் இலவசமாக கல்வி பெற வேண்டுமா?


கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள தரமான தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பிற்கான சேர்க்கை விண்ணப்பம் வரும் ஏப்ரல் 20ம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்படுகிறது.

எனவே, இதற்கு விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு, காலியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை இங்கே காண்போம்.

கேள்வி 1: கல்வி உரிமைச் சட்டம் சொல்வதென்ன?

கல்வி உரிமை சட்டம்-2009-ன் படி நலிந்த மற்றும் பின் தங்கிய வகுப்பு குழந்தைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் இலவசமாகக் கல்வி பெற 25% சேர்க்கை வழங்கப்படுகிறது.

அதாவது, சிறுபான்மை அல்லாத எல்லா பள்ளிகளும் தங்களது மொத்தமுள்ள இடங்களில் 25 சதவீதத்தை நலிந்த மற்றும் பின் தங்கிய குழந்தைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

கேள்வி 2 : எல்லாக் குழந்தைகளுக்கும் இச்சட்டத்தின் மூலம் கல்வி உரிமை அளிக்கப்படுகிறதா ?

பதில்: இல்லை. 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டும் இந்த கல்வி வழங்கப்படும். 6 வயது வரையில் உள்ள குழந்தைகள் ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சித் திட்ட சேவைகள் மூலமும், நர்சரி பள்ளிகளின் மூலமும் கல்வி பயின்று வருகின்றனர். 14 வயதிற்கு பின், அதவாது எட்டாவது வயதிற்குப்பின் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்யும் சட்டம் இந்தியாவில் இல்லை.

கேள்வி எண் 3 : 25% இடங்களின் கீழ், பள்ளிக் கட்டணங்கள் முற்றிலும் இலவசமா? 

இல்லை. இச்சட்டத்தின் கீழ், கல்விக் கட்டணம் மட்டுமே முற்றிலும் இலவசம். புத்தகங்கள், சீருடைகள், பள்ளி வேன் உள்ளிட்ட செல்வுகளை பெற்றோர்கள் ஏற்க வேண்டும்.

கேள்வி எண் 4 : நுழைவு நிலை வகுப்பில் மட்டும் தான் சேர்க்கை நடைபெறுமா?

பதில்: ஆம். தனியார் பள்ளிகளில் LKG அல்லது 1ஆம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப செயல்முறை மட்டுமே தற்போது நடைபெற இருக்கிறது. உங்கள் அருகாமையில் உள்ள தனியார் பள்ளியில் LKG ஆரம்ப வகுப்பாக இருந்தால், அப்பள்ளியில் LKG சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பெறலாம். அதே சமயம் 1ம் வகுப்பு ஆரம்ப வகுப்பாக இருந்தால் , 1ம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பெறலாம். சுருங்கச் சொன்னால், பள்ளி எந்த வகுப்பில் ஆரம்பிக்கிறதோ அந்த வகுப்பில் சேர்க்கை நடைபெறும்.

எனவே, இரண்டாம் வகுப்பு முடித்து 3ம் வகுப்பு செல்லும் குழந்தைகளின் பெற்றோர்கள் தற்போது புதிதாக இச்சட்டத்தின் கீழ் 25% ஒதுக்கீட்டில் பயில இடம் கோர முடியாது. எனவே, உங்கள் குழந்தையை RTE சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பினால், LKG அல்லது 1ம் வகுப்பிலேயே சேர்க்கை பெற வேண்டும். அப்படி சேர்க்கைப் பெற்ற குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் இலவசமாக கிடைக்கும்.

கேள்வி எண் 5 : விண்ணப்பபம் எப்படி நடைபெறுகிறது?

வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அவ்வப்போதைய நிலவரங்களை தெரிந்து கொள்ள பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கேள்வி எண் 6 : சேர்க்கை எப்படி நடைபெறுகிறது?

நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட, கூடுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டால், குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு நடைபெறும். நாட்டின் ஏனைய மாநிலங்களில் இந்த குலுக்கல் முறை ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் அந்தந்த பள்ளிகளில் நேரடியாக நடைபெறுகிறது. இந்த குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்ப் பட்டியல் RTE இணைய தளத்திலும், அந்தந்த பள்ளிகளின் பெயர் பலகையிலும் வெளியிடப்படும்.

கேள்வி எண் 7: தமிழ்நாட்டின் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் இந்த சட்டம் பொருந்துமா?

ஆம்!!! நாட்டில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் RTE சட்ட விதிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால், சிபிஎஸ்இ பள்ளிகள், RTE சேர்க்கை தொடங்குவதை செய்தியாக ஊடகங்களில் வெளியிடுவதில்லை. ஆர்வமும், தகுதியும் உள்ள பெற்றோர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று 25% இடங்களின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

கேள்வி எண் 8 : நலிந்த பிரிவினர் யார்?

பட்டியல் இனத்தவர், பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், பெற்றோர்களை இழந்த குழந்தை, தூய்மைப் பணியாளர்களின் குழந்தை, எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தை, திருநங்கையர்களின் வளர்ப்புக் குழந்தை ஆகியவர்கள் இந்த தனியார் பள்ளிகளில் உள்ள 25% இடங்களின் கீழ் சேர்க்கை கோரலாம்.

கேள்வி எண் 9 : பின் தங்கிய குழந்தைகள் என்றால் யார்?

பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு குறைவாக இருக்கும் குழந்தைகள் இந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம்.



Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support