10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது – திடீர் அறிவிப்பு!

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது – முதல்வர் திடீர் அறிவிப்பு!

அஸ்ஸாம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பொதுத்தேர்வு:

அஸ்ஸாம் மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உயர்நிலைக் கல்வி கவுன்சில் (AHSEC) வாரியத்தின் அடிப்படையிலும், 10 ஆம் வகுப்பு தேர்வு இடைநிலைக் கல்வி வாரியம் (SEBA) அடிப்படையிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த இரண்டு மாநில வாரியங்களும் ஒரே நிறுவனமாக இணைக்கப்படும் என முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்திருந்த நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதாவது, அடுத்த ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடைநிலைக் கல்வி வாரியம் (SEBA) மூலமாக தேர்வு நடைபெறாது எனவும், பள்ளி அளவில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் எனவும் முதல்வர் அறிவித்திருக்கிறார். மேலும், அஸ்ஸாம் மாநிலத்தில் புதிய கல்வி வாரியம் அமைக்கப்படும் எனவும் திடீர் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு, அஸ்ஸாம் மாநிலத்தில் புதிய கல்வி வாரியம் அமைக்கப்படுவதனால் இடைநிலைக் கல்வி வாரியத்துடன் (SEBA) தொடர்புடைய ஊழியர்கள் எந்தவிதத்திலும் பாதிப்படைய மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...