12th Tamil unit 1 Question paper and Answer key 2021-2022

 மேல்நிலை இரண்டாம் ஆண்டு - 2021-2022 அலகுத்தேர்வு-1

12th Tamil unit 1 Question paper and Answer key 2021-2022

நேரம் மதிப்பெண்கள்  : 50 

| அனைத்து வினாக்களுக்கும் விடை தருக:

பகுதி - 1

1. இலக்கியத்தையும் மொழியையும் ஒரு சேரப் பேசுகின்ற இலக்கண நூல் 

அ} யாப்பருங்கலக்காரிகை     ஆ) தண்டியலங்காரம்     இ) தொல்காப்பியம்

ஈ )நன்னூல்

விடை:இ) தொல்காப்பியம்

2.மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது

தன்னேர் இலாத தமிழ்!" . இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம் 

அ) அடிமோனை , அடி எதுகை       ஆ ) சீர்மோனை,சீர் எதுகை

இ) அடி எதுகை, சீர்மோனை            ஈ )சீர் எதுகை,அடிமோனை

விடை :இ) அடி எதுகை, சீர்மோனை

3. பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தேர்க 

அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்

ஆ) புத்தகக் காண்காட்சி நடைபெறுகிறது

 இ) வஹட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.

ஈ) மயில்கள் விறவியரைப் போல் ஆடுகின்றன.

விடை :அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்

4. பொருத்துக 

அ) தமிழ் அழகியல்   -1. பரலி சு.நெல்லையப்பர்

ஆநிலவுப்பூ                   --2. தி.சு.நடராசன்

இ) கிடை                          -3.சிற்பி பாலசுப்பரமணியம்

ஈ)உய்யும் வழி              --4. கி.ராஜ நாராயணன்

a) 4,3,2,1     பb . 1,4,2,3        c .24,1,3         d ) 2,3,4,1

விடை :d  ) 2,3,4,1

5. "மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்

 க) பாண்டியரின் காலத்தில் கொலுவிருந்தது

உ]பொதிகையில் தோன்றியது.

ங) வள்ளல்களைத் தந்தது

அ) க மட்டும் சரி 

ஆ)க, உ மட்டும்  சரி இ) ஙமட்டும் சரி 

ஈ} க, ஙஇரண்டும் சரி 

விடை ஈ} க, ஙஇரண்டும் சரி 

6. BIOCRAPHY என்பதன் தமிழ்ச்சொல்லை தேர்ந்தெடுக்கவும். 

அ) நூல் நிரல் ஆ)புனைவு இ)கையெழுத்துப் பிரதி ஈ) வாழ்க்கை வரலாறு

விடை ஈ) வாழ்க்கை வரலாறு

7. தண்டியலங்காரம் .என்பதன் வடமொழி இலக்கண நூலைத் தழுவி

எழுதப்பட்டதாகும் 

அ)நேமி நாதம்

ஆ)அவந்தி சுந்தரி 

இ) காவியதர்சம்

 ஈ)மேகசந்தேசம் 

விடை :இ) காவியதர்சம்

8. கீழ்க்கண்டவற்றுள் சிற்பியின் சாகித்திய அகாடெமி விருது பெற்ற நூல் எது ?

அ)ஒளிப்பறவை

ஆபூஜ்யங்களின் சங்கலி

இ)சூரிய நிழல் 

ஈ)ஒரு கிராமத்து நதி 

விடை; ஈ)ஒரு கிராமத்து நதி 

9. "நுந்தை தந்தைக்கு இவன் தந்தை " என்று பாடும் நூல்

அ)நற்றினை

ஆ)புறநானூறு

இ)அகநானூறு

 ஈ)கலித்தொகை

விடை : ஆ)புறநானூறு

10 . பிழையான தொடரைக் கண்டறிக

அ)காளைகனைப் பூட்டி வயலை உழுதனர்

ஆமலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தார் 

இ)காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது

விடை :இ)காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது

11. கருத்து 1: இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு 

கருத்து 2: தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.

அ)கருத்து 1 சரி

ஆ)கருத்து 2 சரி

இ)இரண்டு கருத்தும் சரி 

ஈ கருத்து 1 சரி, 2 தவறு

விடை இ)இரண்டு கருத்தும் சரி 

12. பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது என்று கூறியவர்

அ)பாரதிதாசன்                 ஆ)சிற்பி பாலசுப்ரமணியம்

இ)பாரதியார்                         ஈ)பரலி சு.நெல்லையப்பர்

விடை : இ)பாரதியார் 

13. பல் + துளி என்பது எவ்வாறு புனாரும் ?

அ)பஃறு ளி 

ஆ)பல்துளி

இ)பல்றுளி

ஈ)பல துளி

விடை :அ)பஃறு ளி 

14. சிறுகதை ஆசிரியர், முதல் பாதி நவீனம் ?

அ)மறைமலை அடிகள்      இ)ஜெயகாந்தன்

ஆ)புதுமைப்பித்தன்        ஈ)அசோகமித்திரன்

விடை இ)ஜெயகாந்தன்

I/எவையேனும் மூன்றனுக்கு விடை தருக                                                         3x2=6

பகுதி 2

15.நடை அழகியல் பற்றித் தொல்காப்பியர் கூறும் கருத்தைக் குறிப்பிடுக 

 • நடைபெற்றியலும் (கிளவியாக்கம், 26) 
 • என்றும் நடை நவின்றொழுகும் (செய் 135) 
 • என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது.
 • கவிதையின் இயங்காற்றல்தான் நடை என்கிறது தொல்காப்பியம்.
 • மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே நடை எனப்படும்.

16. அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள் யாவை 

 • தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம்.

17. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

 • செந்நிறத்து வானம் போல் சிவந்த கைகள் உடைய உழைக்கும் தொழிலாளர்களின் திரண்ட தோள் மீது வீற்றிருக்கும் வியர்வை முத்துக்களைப் பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி

18.விடியல், வனப்பு - இரு சொற்களையும் ஒருங்கிணைத்து தொடர் அமைக்க

 • பூத்துக் குலுங்கும் பூக்களின் மணத்திலும் பறவைகளின் ஒலிகளிலும் விடியலின் வெளிச்சமாக உதிக்கும் கதிரவனின் தோற்றம் இயற்கையின் வனப்பை எடுத்துரைக்கும்.

 19.பாரதி நடத்திய இதழ்கள் இரண்டினைக் கூறுக

 • இந்தியா ,விஜயா 

iii . எவையேனும் ஏழனுக்கு விடை தருக                                          7x2=14

20. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய  முயற்சிகள் யாவை? 

 • (i) எழுத்தினைத் தெளிவாக உச்சரிக்கப் பழக வேண்டும். ந, ண, ன / ல, ள / ழ, ற, ர ஒலிப்பு வேறுபாடு தெரிந்து ஒலிக்க வேண்டும்.
 • (ii) இவ்வெழுத்துக்கள் வரும் முறையையும் அவை ஏற்படுத்தும் பொருள் மாற்றத்தையும் அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாகும். எழுதும் போது தொடக்கத்தில் சில காலம் வாய்விட்டோ அல்லது மனத்துக்குள் உச்சரித்தபடியோ எழுதப்பழகுவது நல்லது.
 • (iii) வேகமாக எழுத முயல்வது பிழைக்கு வழிகோலும், எனவே நிதானமாக எழுதுவது நல்லது.

21. "உள்ளங்கை நெல்லிக்களி போல" என்ற உவமைத்தொடரை சொற்றொடரில் அமைத்து எழுதுக 

விடை 

 • தமிழாசிரியர் கற்பித்த புணர்ச்சி இலக்கணம் எங்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாய் விளங்கியது.

22. பொருள் வேறுபாடு அறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக- கிளி, கிலி 

விடை : 

 • இரவில்  கிளிபோல கத்திய சத்தத்தை கேட்டு கண்ணன் மனதில் கிலி(பயம் ) தங்கியது  

23. முடிந்தால் தரவாம், முடித்தால் தரவாம்- இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருள் யாவை?

முடிந்தால் தரலாம் :

 • முடிந்தால் – கொடுக்கும் எண்ணம் (இயன்றால்)
 • ஒரு பொருளைக் கொடுக்க முடிந்தால் கொடுக்கலாம் என்ற பொருளைத் தருகின்றது.
 • உன்னிடம் உள்ள பொருளைக் கொண்டு ஏழைகளுக்கு உதவ முடிந்தால் தரலாம்.

முடித்தால் தரலாம் :

 • முடித்தால் – செயல் முடிந்த பின்
 • தரப்பட்டுள்ள வேலையை முடித்து விட்டேன் என்றால் தரலாம் என்ற பொருளைத் தருகின்றது.
 • வீட்டின் திறவுகோலை வேலைகளை முடித்தால் தரலாம்.

24. தமிழாக்கம் தருக

I) Knowledge of language is the doorway to wisdom 

II) The limits of my language are the limits of my world 

 • மொழிகளின் அறிவு ஞானத்தின் வழித்தடம்.
 • என் மொழியின் எல்லை என் உலகத்தின் எல்லை.

25. எவையேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக

(i )சாய்ப்பான் II) உயர்ந்தோர்

26. எவையேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக

I)வானமெல்லாம்

வானமெல்லாம் = வானம் + எல்லாம்

 • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ம் + எ = மெ) வானெமல்லாம் எனப் புணர்ந்தது.

II) ஆங்கவற்றுள்

ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள்

 • ‘உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்’ என்ற விதிப்படி, ஆங்க் + அவற்றுள் என்றானது.
 • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (க் + அ = க ) ஆங்கவற்றுள் என்று புணர்ந்தது.

27. இலக்கணக்குறிப்பு தருக: 

I) வெங்கதிர்   - பண்புத்தொகை 

   II) வியர்வை வெள்ளம் - உருவகம் 

 28, ஈரொற்றாய் வராத வல்லின மெய்கள் யாவை?

 • ர ,ழ

IV எவை யேனும் மூன்றனுக்கு விடை தருக              3x4 = 12

29.ஓங்கலிடை. வந்து  உயர்ந்தோர் தொழவிளங்கி' என்ற பாடலில் பயின்று வரும் அணியைச் சுட்டி - விளக்குக 

அணி இலக்கணம் :

 • செய்யுளில் கவிஞர் இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறியப்பின் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும். இது வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும்.

சான்று :

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது

தன்னேர் இலாத தமிழ்

அணிப்பொருத்தம் :

 • கதிரவனும், தமிழ்மொழியும் மலையில் தோன்றுகின்றன என ஒப்புமையைக்கூறி, அவற்றுள் தமிழ்மொழிக்கு நிகராக வேறெந்த மொழியும் இவ்வுலகில் இல்லை என்று வேறுபடுத்திக் காட்டியதால் இப்பாடல் பொருள் வேற்றுமையணி ஆகும்

 30. சங்கப் பாடல்களில ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் - விளக்கு

 • எந்தத் தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும் தான் தோன்றுகிறது.
 • சங்கப்பாடல்களில் ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன.
 • இதனையே அந்தப் பனுவல் பாடல்களின் ஒலிப்பின்னல் என்கிறோம். இந்த ஒலிக்கோலங்கள் உணர்ச்சிகளைக் காட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன.

கடந்தடு தானை மூவிருங் கூடி

உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே;

முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன்னாடு;

முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;

 • உயிர் ஒலிகள் குறிப்பாக நெடில் ஒலிகளின் வருகையும், சில ஒலிகளும் சில சொற்களும் திரும்பவரல் தன்மை பெற்றிருப்பதும், இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாக விளங்கியதை உணர்த்தும்.

சான்று : 

 • ‘படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசை கடாஅ யானைக்’ – இவ்வரிகள் ஒலிக்கோலத்தின் பண்பை உணர்த்துகிறது.

31. செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம்" தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக

 • கதிரவன் தன் கதிர்களைச் சுருக்கிக் கொண்டு மேற்கு நோக்கி மறைவது இயற்கை.
 • ஆனால் கவிஞர் செம்மைமிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் தன் தலை சாய்க்கிறான் என்கிறார்.
 • கதிரவனின் கதிரொளி பட்டு வானமெனும் காடெல்லாம் பூக்காடாய் மாறின என்று சிற்பி நயம்பட விளக்குகிறார்.

32.ஏங்கொலி ஞாலத்து இருளகற்றும் - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக

இடம் :

 • இப்பாடலின் அடி தண்டியலங்காரம் என்னும் அணி இலக்கண நூலின் பொருளணியியலில் இடம் பெற்றுள்ள உரை மேற்கோள் பாடலாகும். இதன் ஆசிரியர் தண்டி ஆவார்.

பொருள் :

 • மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே பொதிகையில் பிறந்து, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் இருளைப்போக்கும் தமிழே உனக்கு நிகர் இல்லை என்கிறார்.

 33.பின்வரும் இருபாக்களின் கருத்துகளிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக

 • பழையன கழிதலும் புதியன புகுதலும்   வழுவல கால வகையினானே
- நன்னூல் 
 • மீண்டு மந்தப் பழமைநலம் புதுக்குதற்கு    மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா! 
- சிற்பி பாலசுப்பிரமணியம்
விடை 

அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுதுக         1x4-4 

34. " ஓங்கலிடை" எனத் தொடங்கும் தண்டியலங்கார உரை மேற்கோள் பாடலை அடிபிறழாமல் எழுதுக.

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது

தன்னேர் இலாத தமிழ்


12th tamil Book back Answers

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-1 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-2 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers unit-3 Guide

 • இயல் 3.5 பொருள் மயக்கம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-4 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-5 Guide

 • இயல் 5.1 மதராசப்பட்டினம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-6 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-7 Guide

 • இயல் 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு
 • இயல் 7.4 புறநானூறு
 • இயல் 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
 • இயல் 7.6 தொன்மம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-8 Guide

 • இயல் 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்
 • இயல் 8.2 முகம்
 • இயல் 8.4 சிறுபாணாற்றுப்படை
 • இயல் 8.5 கோடை மழை
 • இயல் 8.6 குறியீடு

Dear visitors we understand your expectations for tamilnadu state board samacheer book 12th Tamil Full Guide solutions book back answers guide.these 12th Tamil book answers guide help for your exam preparation for online study you can get good marks in your Examination.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...