8th Std Social Science History | Lesson 5 - இந்தியாவில் கல்வி வளர்ச்சி | Book back Answers

8th Std Social Science History | Lesson 5 - இந்தியாவில் கல்வி வளர்ச்சி | Book back Answers

பாடம்.5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. வேதம் என்ற சொல்லிருந்து வந்தது.

a. சமஸ்கிருதம்

b. இலத்தீன

c. பிராகிருதம்

d. பாலி

Answer : சமஸ்கிருதம்

2. பின்வருனவற்றுள் எது பணண்டய காலத்தில் கற்றலுக்கான முக்கிய மையமாக இருந்தது?

a. குருகுலம்

b. விகாரங்கள்

c. பள்ளிகள்

d. இவையனைத்தும்

Answer : இவையனைத்தும்

3. இந்தியாவின் மிகப் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்

a. உத்திரப்பிரதேசம்

b. மகாராஷ்டிரம்

c. பீகார்

d. பஞ்சாப்

Answer : பீகார்

4. தட்சசீலத்தை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய தளமாக எப்போது அறிவித்தது?

a. 1970

b. 1975

c. 1980

d. 1985

Answer : 1980

5. இந்தியாவில் நவீன கல்வி முறையைத் தாெடஙகிய முதல் ஐராேப்பிய நாடு எது?

a. இங்கிலாந்து

b. டென்மார்

c. பிரான்சு

d. போர்ச்சுக்கல்

Answer : போர்ச்சுக்கல்

6. இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் மானியமாக 1 இலட்சம் ரூபாய் தாெகையை வழங்குவதற்கானை ஏற்பாட்டினை செய்த சாசன சட்டம் எது?

a. 1813 ஆம் ஆண்டு சாசன சட்டம்

b. 1833 ஆம் ஆண்டு சாசன சட்டம்

c. 1853 ஆம் ஆண்டு சாசன சட்டம்

d. 1858 ஆம் ஆண்டு சட்டம்

Answer : 1813 ஆம் ஆண்டு சாசன சட்டம்

7. பின்வரும் குழுக்களில் எந்தக் குழு பல்கலைக்கழக மானியக் குழுவினை அமைக்கப் பரிந்துரைத்தது?

a. சார்ஜெண்ட் அறிக்கை, 1944

b. இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948

c. கோத்தாரி கல்விக்குழு, 1964

d. தேசியக் கல்விக் கொள்கை, 1968

Answer : இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948

8. இந்தியாவில் புதிய கல்விக் காெள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

a. 1992

b. 2009

c. 1986

d. 1968

Answer : 1986

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1.  வேதம் என்ற சொல்லின் பொருள் ______________

Answer : அறிவு

2. தட்சசீல இடிபாடுகளை கண்டறிந்தவர் _________.

Answer : அலெக்சாண்டர் கன்னிங்காம்

3. டில்லியில் மதரஸாவை நிறுவிய முதல் ஆட்சியாளர் __________________ ஆவார்.

Answer : இல்த்துமிஷ்

4. புதிய கல்விக் காெள்கை திருத்தப்பட்ட ஆண்டு _________.

Answer : 1992

5. 2009ஆம் ஆண்டு இலவசக் கட்டாய கல்வி சேட்டத்தின விதிகளை அமல்படுத்துகின்ற முதன்மையான அமைப்பு __________________ ஆகும்.

Answer : RMSA

6. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுதப்பட்ட ஆண்டு _________.

Answer : 1956

III.பொருத்துக

1. இட்சிங்         - சரஸ்வதி மகால்

2. பிரானசிஸ் சேவியர்         - இந்திய கல்வியின் மகா சாசனம்

3. உட்ஸ் கல்வி அறிக்கை    -  மதராஸில் மேற்கத்திய கல்வி

4. இரண்டாம் சரபோஜி     - கொச்சி பல்கலைக்கழம்

5. சர் தாமஸ் மன்றோ    -  சீன அறிஞர்

Answer : 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ, 5 – இ

IV. சரியா? தவறா? எனக் குறிப்பிடு

1. சரகர் மற்றும் சுஸ்ருதர் ஆகியாேரின் குறிப்புகள் மருத்துவத்தை கற்றுக்காெள்ள ஆதாரங்களாக இருந்தன.

Answer : சரி

2. காேயில்கள் கற்றல் மையங்களாக திகழ்ந்ததாேடு அறிவைப் பெருக்கி காெள்ளும் இடமாகவும் இருந்தது.

Answer : சரி

3. கல்வியை ஊக்குவிப்பதில் அரசர்களும், சமூகமும் தீவிர அக்கறை காட்டியதாக ஜாதகக் கதைகள் குறிப்பிடுகின்றன.

Answer : சரி

4. இடைக்கால இந்தியாவில் பெண் கல்வி நடைமுறையில் இல்லை

Answer : தவறு

5. RMSA திட்டமானது பத்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் செயல்படுத்தப்பட்டது.

Answer : தவறு

V. பின்வருவனவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடு

i) நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி. (பொ.ஆ.) ஐந்தாம் நூற்றாண்டில் தாேற்றுவிக்கப்பட்டது.

ii) பண்டைய இந்தியாவில் மாணவர்களை தேர்ந்தெடுப்பது முதல் அரசர்களின் பாடத்திட்டத்தினை வடிவமைப்பது வரை அனைத்து அம்சங்களிலும் ஆசிரியர்கள் முழுமையானை சுயாட்சி காெண்டிருந்தனர்.

iii) பண்டைய  காலத்தில் ஆசிரியர்கள் கணக்காயர் என்று அழைக்கப்பட்டனர்.

iv) சோழர்கள் காலத்தில் புகழ்பெற்ற கல்லூரியாக காந்தளூர் சலை இருந்தது.

a. i மற்றும் ii சரி

b. ii மற்றும் iv சரி

c. iii மற்றும் iv சரி

d. i, ii மற்றும் iii சரி

Answer : i, ii மற்றும் iii சரி

2. சரியான இணையை கண்டுபிடி

a. மக்தப்கள் – இடைநிலைப்பள்ளி

b. 1835 ஆம் ஆண்டின் மெக்காலேயின் குறிப்பு – ஆங்கிலக்கல்வி

c. கரும்பலகைத் திட்டம் – இடைநிலைக் கல்வி குழு

d. சாலபோகம் – கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்

Answer : 1835 ஆம் ஆண்டின் மெக்காலேயின் குறிப்பு – ஆங்கிலக்கல்வி

VI. ஓரிரு வாக்கியங்களில் Answerயளி

1. குருகுலத்தின முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக.

பண்டைய காலத்தில் மாணவர்கள் குருவின் விட்டில் குடும்ப உறுப்பினர் போல வந்து தங்கி கல்வி பயின்றனர். இதுவே குருகுலக் கல்வி முறை எனப்பட்டது

2. பண்டைய இந்தியாவில் உருவான மிகவும் குறிப்பிடத்தக்க பல்கலைக்கழகங்களின் பெயர்களை எழுதுக.

• தட்சசீலம்

• நாளந்தா

• வல்லபி

• விக்கிரமசீலா

• ஓடண்டா

• புரி

• ஜகத்தாலயா

3. தட்சசீலம் பற்றி சிறு குறிப்பு எழுதுக.

• பண்டைய இந்திய நகரமாக இருந்த தட்சசீலம் வடமேற்கு பாகிஸ்தானில் உள்ளது.

• இதனை 1980இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது.

• இப்பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளை தொல்பொரள் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் கன்னிங்காம் கண்டுபிடித்தார்.

4. சோழர் காலத்தில் தழைத்தாேங்கிய கல்வி நிலையங்களை குறிப்பிடுக.

• சதுர்வேதி மங்கலம் – வேதக்கல்லூரி

• திருபுவனை – வேதக்கல்லூரி

• திருவிடுக்காளை- நூலகம்

• திருவாடுதுறை – மருத்துவப்பள்ளி

5. SSA மற்றும் RMSA விரிவாக்கம் தருக.

• SSA – அனைவருக்கும் கல்வி இயக்கம் (Sarva Shiksha Abhiyan)

• RMSA – அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் (Rashtriya Madhyamik Shiksha Abhiyan)

6. கல்வி பெறும் உரிமைச் சட்டம் (RTE) பற்றி நீவிர் அறிவதென்ன?

கல்வி பெறும் உரிமைச் சட்டமானது (RTE) 6 முதல் 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்க வழி செய்கிறது.


Post a Comment

0 Comments