10th Tamil Guide Unit 2.5
2.5. தொகைநிலைத் தொடர்கள்
I. பலவுள் தெரிக
‘பெரிய மீசை’ சிரித்தார் – வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?
- பண்புத்தொகை
- உவமைத்தொகை
- அன்மொழித்தொகை
- உம்மைத்தொகை
விடை : பண்புத்தொகை
II. குறு வினா
தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க
- தண்ணீர் குடி
- தண்ணீரைக் குடி (இரண்டாம் வேற்றுமைத் தொகை)
- மிகுந்த தாகத்தினால் தண்ணீரைக் குடித்தேன்.
- தயிர்க்குடம்
- தயிரை உடைய குடம் (இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை)
- கமலா தயிர்க்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள்.
II. சிறு வினா
தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.
இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.
மல்லிகைப்பூ:-
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
மல்லிகை என்னும் பூ (மல்லிகை – சிறப்பு பெயர், பூ – பொதுப்பெயர்)
பூங்கொடி:-
உவமைத் தொகை
பூ போன்ற கொடி
தண்ணீர்த் தொட்டியில்;-
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
தண்ணீரை ஊற்றும் தொட்டி
குடிநீர் நிரப்பினாள்;-
இரண்டாம் வேற்றுமைத் தொகை
குடிநீரை நிரப்பினாள்
கூடுதல் வினாக்கள்
1. சொற்றொடர் என்றால் என்ன?
சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது “சொற்றொடர்” அல்லது “தொடர்” எனப்படும்.
எ.கா.:- நீர் பருகினான், வெண்சங்கு ஊதினான்.
2. தொகைநிலைத் தொடர் என்றால் என்ன?
பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அதனைத் தொகைநிலைத்தொடர் என்று கூறுவர்.
எ.கா.:- கரும்பு தின்றான்.
3. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்.?
தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும்.
அவை
- வேற்றுமைத்தொகை
- வினைத்தொகை,
- பண்புத்தொகை
- உவமைத்தொகை ,
- உம்மைத்தொகை
- அன்மொழித்தொகை என்பன ஆகும்.
4. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) ஆகியவ ற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத்தொகை எனப்படும்.
5. பண்புத்தொகை என்றால் என்ன?
நிறம், வடிவம், சுவை , அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவிநிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் “மை” என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
6. இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்றால் என்ன?
சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ’ஆகிய’ என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.
7. உவமைத்தொகை என்றால் என்ன? எ.கா. தருக.
உவமைக்கும் பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவமஉருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
எ.கா.:- மலர்க்கை (மலர் போன்ற கை)
8. உம்மைத்தொகை என்றால் என்ன?
இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ’உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகையாகும்.
9. உம்மைத்தொகை என்றால் என்ன?
உம்மைத்தொகை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப்
பெயர்களைத் தொடர்ந்து வரும்.
10. அன்மொழித்தொகை என்றால் என்ன?
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித் தொகை ஆகும்.
கற்பவை கற்றபின்
வண்ணமிட்ட தொகைச் சொற்களை வகைப்படுத்துக.
1. அன்புச்செல்வன் திறன்பேசியின் தாெடுதிரையில் படித்துக் காெண்டிருந்தார்.
அன்புச்செல்வன் – இருபெயரொட்டு பண்புத்தொகை
தாெடுதிரை – வினைத்தொகை
2. அனைவருக்கும் மோர்ப்பானையைத் திறந்து மோர் காெடுக்கவும்.
மோர்ப்பானை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
மோர் காெடுக்கவும் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
3. வெண்டக்காய்ப் பாெரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும்.
வெண்டக்காய்ப் – இருபெயரொட்டு பண்புத்தொகை
மோர்க்குழம்பு – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
4. தங்கமீன்கள் தண்ணீர்த் தாெட்டியில் விளையாடுகின்றன.
தங்கமீன்கள் – உவமைத்தொகை
தண்ணீர்த் தாெட்டி – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
I. தமிழில் மொழிபெயர்த்துத் தலைப்பிடுக.
The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers’ fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.
இயற்கை
பொன்னான கதிரவன் நாள்தோறும் காலையில் எழுந்து அதன் ஒளிக் கதிர்களை வீசி, இருளை மறையச் செய்யும், பால் போன்ற மேகங்கள் சுற்ற ஆரம்பித்துவிடும். வண்ணப் பறவைகள் இதமான சூழ்நிலையைத் தன் இறகுகளை அடிப்பதன் மூலம் உருவாக்கும். அழகான வண்ணத்துப் பூச்சி மலர்களைச் சுற்றி ஆடும். பூக்களின் நறுமணம் தென்றல் காற்றை நிரப்பும். அந்தக் காற்று அனைத்த இடங்களிலும் பரவி ஒரு புத்துணர்வான சூழ்நிலையை உருவாக்கும்.
II. சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.
(இன்சொல், எழுகதிர், கீரிபாம்பு, பூங்குழல் வந்தாள், மலை வாழ்வார், முத்துப்பல்)
1. இன்சொல் – பண்புத்தொகை
இனிமையான சொல் கூறுதல் சான்றோர்க்கு அழகு
2. எழுகதிர் – வினைத்தொகை
கடலின் நடுவே தோன்றும் ஏழுகதிரின் அழகே அழகு
3. கீரிபாம்பு – உம்மைத்தொகை
பகைவர்கள் எப்போதும் கீரியும் பாம்பும் போல இருப்பார்கள்
4. பூங்குழல் வந்தாள் – அன்மொழித் தொகை
பூப் போன்ற கூந்தலையுடைய பெண் வந்தாள்
5. மலை வாழ்வார் – ஏழாம் வேற்றுமைத் தொகை
பழங்குடியினர் மலையின் கண் வாழ்பவர்
6. முத்துப் பல் – உவமைத் தொகை
வெண்மதியின் முத்துப் பல் மேலும் அவளுக்கு அழகு சேர்க்கிறது
III. செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள் பூ உண்டு. ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்டற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள்: ஆல மலர்; பலா மலர்.மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர்.அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா.பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம் பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்
– கோவை.இளஞ்சேரன்
1. மலர் உண்டு; பெயரும் உண்டு – இரண்டு தொடர்களையும் ஒரு தொடராக்குக.
மலருக்கு பெயர் உண்டு
2. அரும்பாகி மொட்டாகிப் பூவாகி…. என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக.
மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும்
3. நீங்கள் அறிந்த இரு பூக்களின் பெயர்களையும் பயன்களையும் எழுதுக.
பாதிரிப்பூ – குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும். உடல் நலத்தை பெருக்கி குளிர்ச்சியூட்டும்
முருங்கைப்பூ – இப்பூவைக் கசாயம் செய்து வாரம் இருமுறை குடிக்கவும். குடித்துவர நீரிழிவு நோய், நரம்புத்தளர்ச்சி நோய் நீங்கும். நினைவாற்றல் பெருகும்
4. அரிய மலர் – இலக்கணக் குறிப்புத் தருக.
அரிய மலர் – பெயரச்சம்
5. தொடரில் பொருந்தாப் பொருள்தரும் மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக.
இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும்
விடை –
இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும்
மொழியோடு விளையாடு
I. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.
(காடு, புதுமை, விண்மீன், காற்று, நறுமணம்)
1. முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்; நீக்காவிட்டாலும் வாசனை தரும்.
நறுமணம்
2. பழமைக்கு எதிரானது – எழுதுகோலில் பயன்படும்
புதுமை
3. இருக்கும்போது உருவமில்லை – இல்லாமல் உயிரினம் இல்லை.
காற்று
4. நாலெழுத்தில் கண் சிமிட்டும் – கடையிரண்டில் நீந்திச் செல்லும்
விண்மீன்
5. ஓரெழுத்தில் சோலை – இரண்டெழுத்தில் வனம்
காடு
II. நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக.
(வனத்தின் நடனம், மிதக்கும் வாசம், காற்றின் பாடல், மொட்டின் வருகை, உயிர்ப்பின் ஏக்கம், நீரின் சிலிர்ப்பு)
1. கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது.
காற்றின் பாடல்
2. புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது; அச்செடியை வரவேற்கும் விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.
மொட்டின் வருணனை
3. சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன.
மிதக்கும் வாசம்
4. இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும்; கசகசத்த உயிரினங்கள்.
உயர்ப்பின் ஏக்கம்
5. நின்றுவிட்ட மழை தரும் குளிர்; சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.
நீரின் சிலிப்பு
6. குயில்களின் கூவலிசை. புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும். இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம்.
வனத்தின் நடனம்
III. அகராதியில் காண்க.
1. அகன்சுடர்
சூரியன், விரிந்து சுடர், அகன்ற சுடர்
2. ஆர்கலி
கடல், மழை, ஆரவாரம், பேரொலி, வெள்ளம்
3. கட்புள்
பறைவ, ஒரு புலவன்
4. கொடுவாய்
புலி, வளைந்த வாய், பழிச்சொல்
5. திருவில்
வானவில், இந்திரவில்
கலைச்சொல் அறிவாேம்
- Storm – புயல்
- Land Breeze – நிலக்காற்று
- Tornado – சூறாவளி
- Sea Breeze – கடற்காற்று
- Tempest – பெருங்காற்று
- Whirlwind – சுழல்காற்று
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.தொகை நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
ஈ) ஆறு
2.கீழ்க்காணும் சொற்களில் உம்மைத்தொகை அல்லாத சொல் எது?
அ) தேர்ப்பாகன்
ஆ) அண்ண ன் தம்பி
இ) வெற்றிலை பாக்கு
ஈ) இரவு பகல்
Answer:
அ) தேர்ப்பாகன்
3.‘மதுரை சென்றார்’ – இத்தொடரில் அமைந்துள்ள வேற்றுமைத்தொகை எவ்வகை வேற்றுமைத் தொகைக்குப் பொருந்தும்?
அ) மூன்றாம் வேற்றுமைத் தொகை
ஆ) நான்காம் வேற்றுமைத் தொகை
இ) ஐந்தாம் வேற்றுமைத் தொகை
ஈ) ஆறாம் வேற்றுமைத் தொகை
Answer:
ஆ) நான்காம் வேற்றுமைத் தொகை
4.பொருத்துக.
1. மதுரை சென்றார் – அ) வினைத்தொகை
2. வீசு தென்றல் – ஆ) பண்புத்தொகை
3. செங்காந்தள் – இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
4. மார்கழித் திங்கள் – ஈ) நான்காம் வேற்றுமைத் தொகை
அ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
ஆ) 1.ஈ 2.இ 3.ஆ 4.அ
இ) 1.ஈ 2.ஆ 3.அ 4.இ
ஈ) 1.ஈ 2.இ 3.அ 4.ஆ
Answer:
அ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
5.பொருத்துக.
1. உவமைத்தொகை – அ) முறுக்கு மீசை வைத்தார்
2. உம்மைத்தொகை – ஆ) மலர்க்கை
3. அன்மொழித்தொகை – இ) வட்டத்தொட்டி
4. பண்புத்தொகை – ஈ) அண்ணன் தம்பி
அ) 1.ஆ 2.ஈ. 3.அ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.இ 3.அ 4.ஈ
ஈ) 1.இ 2.ஈ 3.அ 4.ஆ
Answer:
அ) 1.ஆ 2.ஈ 3.அ 4.இ
6.பண்புத்தொகை அல்லாத ஒன்று அ) செங்காந்தள்
ஆ) வட்டத்தொட்டி
இ) இன்மொழி
ஈ) கொல்களிறு
Answer:
ஈ) கொல்களிறு
7.காலம் கரந்த பெயரெச்சம்
அ) வினைத்தொகை
ஆ) பண்புத்தொகை
இ) உவமைத்தொகை
ஈ) உம்மைத்தொகை
Answer:
அ) வினைத்தொகை
8.வேற்றுமையுருபு அல்லாதது
அ) ஐ, ஒடு
ஆ) கு, இன்
இ) ஆகிய, ஆன
ஈ) அது, கண்
Answer:
இ) ஆகிய, ஆன
9.பொருந்தாத இணையைக் கண்டறிக
அ) வினைத்தொகை – தேர்ப்பாகன்
ஆ) பண்புத்தொகை – இன்மொழி
இ) உம்மைத்தொகை – தாய் சேய்
ஈ) அன்மொழித்தொகை – சிவப்புச்சட்டை பேசினார்
Answer:
அ) வினைத்தொகை – தேர்ப்பாகன்
10.‘மலர் போன்ற கை’ இதில் ‘மலர்’ என்பது ………………….. ‘போன்ற’ என்பது ……………… ‘கை’ என்பது…………………..
அ) உவம உருபு – உவமை – உவமேயம்
ஆ) உவமை – உவம உருபு – உவமேயம்
இ) உவமேயம் – உவமை – உவம உருபு
ஈ) இவற்றுள் ஏதுமில்லை
Answer:
ஆ) உவமை – உவம உருபு – உவமேயம்
11.சிறப்புப் பெயர், பொதுப்பெயர் ஆகியன வரும் தொகைச்சொல்
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
ஈ) உம்மைத்தொகை
Answer:
இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
12.மார்கழித் திங்கள், சாரைப்பாம்பு ஆகிய சொற்களில் இடம்பெறும் பொதுப்பெயர்கள் எவை?
அ) மார்கழி, சாரை
ஆ) திங்கள், பாம்பு
இ) மார்கழி, பாம்பு
ஈ) திங்கள், சாரை
Answer:
ஆ) திங்கள், பாம்பு
13.‘செங்காந்தள்’ – இப்பண்புத்தொகைச் சொல்லில் மறைந்து வரும் உருபு
அ) ஆன
ஆ) ஆகிய
இ) போன்ற
ஈ) ஐ
Answer:
ஆ) ஆகிய
14.‘இன்மொழி’ – இப்பண்புத்தொகைச் சொல்லில் மறைந்து வரும் உருபு
அ) ஆன
ஆ) ஆகிய
இ) போன்ற
ஈ) இன்
Answer:
அ) ஆன
15.‘மதுரை சென்றாள்’ – இவ்வேற்றுமைத்தொகைச் சொல்லில் இடம்பெறும் வேற்றுமை உருபு
அ) கு
ஆ) கண்
இ) ஆல்
ஈ) அது
Answer:
அ) கு
16.கரும்பு தின்றான் – இத்தொடர் …………………………….. வேற்றுமைத்தொடர்.
அ) இரண்டாம்
ஆ) மூன்றாம்
இ) நான்காம்
ஈ) ஆறாம்
Answer:
அ) இரண்டாம்
17.நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைக்கான சொல்
அ) தேர்ப்பாகன்
ஆ) தமிழ்த்தொண்டு
இ) கரும்பு தின்றான்
ஈ) மதுரை சென்றார்
Answer:
ஆ) தமிழ்த்தொண்டு
18.பொருத்திக் காட்டுக.
i) வீசு தென்றல் – 1. உம்மைத் தொகை
ii) செங்காந்தள் – 2. உவமைத்தொகை
iii) மலர்க்கை – 3. பண்புத்தொகை
iv) தாய்சேய் – 4. வினைத்தொகை
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 2, 3, 4, 1
Answer:
அ) 4, 3, 2, 1
19.இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கான சொல்
அ) மலர்க்கை
ஆ) அண்ண ன் தம்பி
இ) மார்கழித்திங்கள்
ஈ) தேர்ப்பாகன்
Answer:
இ) மார்கழித்திங்கள்
20.பொருத்துக.
i) இன்மொழி – 1. உவமைத்தொகை
ii) தாய்சேய் – 2. வினைத்தொகை
iii) முத்துப்பல் – 3. உம்மைத் தொகை
iv) வருபுனல் – 4. பண்புத்தொகை
அ) 1, 2, 3, 4
ஆ) 3, 4, 2, 1
இ) 4, 3, 2, 1
ஈ) 4, 3, 1, 2
Answer:
ஈ) 4, 3, 1, 2
0 Comments:
Post a Comment
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.