Daily TN Study Materials & Question Papers,Educational News

10th Tamil Guide Unit 3.2 இயல் 3.2 காசிக்காண்டம்

10th Tamil Guide Unit 3.2
இயல் 3.2 காசிக்காண்டம்

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

    வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

    எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

    போமெனில் பின் செல்வதாதல் 

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

    ஒழுக்கமும் வழிபடும் பண்பே *

    இல்லொழுக்கம், (பா எண் : 17)

சொல்லும் பொருளும்

  •  அருகுற – அருகில்
  • முகமன் – ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்

பாடலின் பொருள் 

விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை வியந்து உரைத்தல், நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல், முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல், ‘வீட்டிற்குள் வருக! என்று வரவேற்றல், அவர் எதிரில் நிற்றல், அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல், அவர் அருகிலேயே அமர்ந்துகொள்ளுதல், அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை பின் தொடர்ந்து செல்லல், அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாகும்.

 I. சொல்லும் பொருளும்

  • அருகுறை – அருகில்
  • முகமன் – ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்

II. பகுபத உறுப்பிலக்கணம்

 1.  உரைத்த – உரை + த் + த் +அ 

உரை – பகுதி

த் – சந்தி

த் – இறந்த கால இடைநிலை

அ – பெயரச்ச விகுதி

2. வருக – வா(வரு) + க 

வா – பகுதி

வரு – எனக் குறுகியத விகாரம்

க – வியங்கோள் வினைமுற்று விகுதி

III. இலக்கணக் குறிப்பு

  • நன்மொழி – பண்புத்தொகை
  • வியத்தல் – தொழிற்பெயர்
  • நோக்கம் – தொழிற்பெயர்
  • எழுதுதல் – தொழிற்பெயர்
  • உரைத்தல் – தொழிற்பெயர்
  • செப்பல் – தொழிற்பெயர்
  • இருத்தல் – தொழிற்பெயர்
  • வழங்கல் – தொழிற்பெயர்

IV. பலவுள் தெரிக.

காசிக்காண்டம் என்பது

1. காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்

2. காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

3. காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

4. காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

விடை : காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

V. குறு வினா

விருந்தினரை மகிழ்வித்து கூறும் முகமன் சொற்களை எழுதுக

  • வாருங்கள் ஐயா, வணக்கம்!
  • அமருங்கள்
  • நலமாக இருக்கிறீர்களா?
  • தங்கள் வரவு நல்வரவு.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. காசி நகரத்தின் பெருமைகளை கூறும் நூல் ____________ ஆகும்.

விடை :காசிக்காண்டம்

2. ____________ என்று அழைக்கப்படுபவர் அதிவீரராம பாண்டியர் ஆவார்

விடை : சீவலமாறன்

\3. ____________ சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது.

விடை : நறுந்தொகை

4. அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர் ____________

விடை : சீவலமாறன்

5. ____________ என்னும் நூலின் ஆசிரியர் அதிவீரராம பாண்டியர்.

விடை : வெற்றிவேற்கை

II. குறு வினா

1. காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் எது?

காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்கண்டம்

 2. காசிக்காண்டம் நூல் குறிப்பு வரைக

  • காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்கண்டம்
  • துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றை பாடுவதாக அமைந்துள்ளது

3. அதிவீராம பாண்டியர் இயற்றிய நூல்கள் யாவை?

  • காசிக்காண்டம்
  • நைடதம்
  • லிங்கபுராணம்
  • வாயுசம்கிதை
  • திருக்கருவை அந்தாதி
  • கூர்மபுராணம்
  • வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை

 4. முகமன் என்னும் சொல் உணர்த்தும் செய்தி யாது?

ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொல்லாகும்.

III. சிறு வினா

1. அதிவீரராம பாண்டியர் குறிப்பு வரைக

  • முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர்.
  • தமிழ்ப் புலவராக திகழ்ந்த இவர் இயற்றி நூல் காசிக்காண்டம்
  • இவர் இயற்றிய வெற்றி வேற்கை என்றழைக்கப்டும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது.
  • இவரின் பட்டப்பெயர்  சீவலமாறன்.
  • காசிக்காண்டம், நைடதம், லிங்கபுராணம், வாயுசம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்மபுராணம், வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை ஆகியவை இவர் இயற்றிய நூல்கள் ஆகும்.

2. விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கம் குறித்து காசிக்காண்டம் குறிப்பிடும் செய்தி யாது?

  • விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை எதிர்கொண்டு வியந்து உரைத்தல் வேண்டும்.
  • நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல் வேண்டும்.
  • முகமலர்ச்சியுடன் அவரை நோக்கி, “வீட்டிற்குள் வருக” என்று வரவேற்று, அவர் எதிரில் நின்று, அவர் முன் மனம் மகிழும்படி பேசுதல் வேண்டும்.
  • அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டு, அவர் விடை பெற்றுச் செல்லும் போது, வாயில் வரை பின் தொடர்ந்து செல்லல் வேண்டும்.
  • வந்தவரிடம் புகழ்ச்சியகா முகமன் கூறி வழியனுப்புதல் வேண்டும்
  • மேற்கண்ட செயல்கள் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்ககமாக காசிக்காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.

பலவுள் தெரிக

1.காசிக்காண்டத்தை இயற்றியவர் யார்?

அ) துளசிதாசர்

ஆ) அதிவீரராம பாண்டியர்

இ) ஔவையார்

ஈ) பெருஞ்சித்திரனார்

Answer:

ஆ) அதிவீரராம பாண்டியர்

2.காசிக்காண்டத்தின் இல்லொழுக்கம் பற்றிய பகுதி எத்தனையாவது பாடல்?

அ) பதினான்காவது

ஆ) பதினாறாவது

இ) பதின்மூன்றாவது

ஈ) பதினேழாவது

Answer:

ஈ) பதினேழாவது

3.முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர்?

அ) அதிவீரராம பாண்டியர்

ஆ) கிள்ளிவளவன்

இ) செங்குட்டுவன்

ஈ) இரண்டாம் புலிகேசி

Answer:

அ) அதிவீரராம பாண்டியர்

4.அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர்

அ) சீவலபேரி பாண்டி

ஆ) சீவலமாறன்

இ) மாறவர்மன்

ஈ) மாறன்வழுதி

Answer:

ஆ) சீவலமாறன்

5.அதிவீரராம பாண்டியர் இயற்றாத நூலைக் கண்டறிக.

அ) நைடதம்

ஆ) வாயு சம்கிதை

இ) திருக்கருவை அந்தாதி

ஈ) சடகோபர் அந்தாதி

Answer:

ஈ) சடகோபர் அந்தாதி

6 .‘அருகுற’ என்பதன் பொருள் என்ன?

அ) அருகில்

ஆ) தொலைவில்

இ) அழிவில்

ஈ) அழுகிய

Answer:

அ) அருகில்

7 .முகமன் எனப்படுவது ……………………

அ) ஒருவரை நலம் வினவிக்கூறும் விருந்தோம்பல் சொற்கள்

ஆ) ஒருவரை எதிர்த்துப் பேசும் சொற்கள்

இ) பெரியோர்களின் கருத்துகளை வரவேற்கும் சொற்கள்

ஈ) மன்னரும் அமைச்சரும் உரையாடும் சொற்கள்

Answer:

அ) ஒருவரை நலம் வினவிக்கூறும் விருந்தோம்பல் சொற்கள்

8 .விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தின் பண்புகள் எத்தனை?

அ) எட்டு

ஆ) ஒன்பது

இ) ஆறு

ஈ) பத்து

Answer:

ஆ) ஒன்பது

9 .வெற்றிவேற்கை என்னும் நூலின் ஆசிரியர் ……………………

அ) அதிவீரராம பாண்டியர்

ஆ) கரிகாலன்

இ) பாரி

ஈ) பாண்டியன் நெடுஞ்செழியன்

Answer:

அ) அதிவீரராம பாண்டியர்

10 .நறுந்தொகை என்னும் நூலின் ஆசிரியர் ……………………

அ) அதிவீரராம பாண்டியர்

ஆ) கரிகாலன்

இ) பாரி

ஈ) பாண்டியன் நெடுஞ்செழியன்

Answer:

அ) அதிவீரராம பாண்டியர்

11 .நறுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?

அ) கொன்றைவேந்தன்

ஆ) காசிக்கலம்பகம்

இ) வெற்றிவேற்கை

ஈ) காசிக்காண்டம்

Answer:

இ) வெற்றிவேற்கை

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support