TN TET ஆசிரியர் தகுதித்தேர்வு – மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு வெளியிடு வருகிறது. அந்த வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் இதில் 9,494 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைய தொடங்கியதில் இருந்து பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் இதற்கு அதிகபட்ச வயது வரம்பு ஏதும் இல்லை. இதில் தாள்-I, தாள்-II என்ற இரு தாள்களுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இதில் தாள்-Iக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதுடன் 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் இதில் தாள்-IIக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் இளநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள், முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட் படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்ய வேண்டும். இதில் விண்ணப்ப ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அத்துடன் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.250 தேர்வுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற http://www.trb.tn.nic.in/TET_2022/07032022/Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

Post a Comment

0 Comments