தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – முக்கிய கோரிக்கை முன்வைக்கப்பட்டது!

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – முக்கிய கோரிக்கை முன்வைக்கப்பட்டது!தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும் கடந்த ஆட்சியில் நடைபெற்ற டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் கடந்த 2020 ஆண்டு முதல் பரவ தொடங்கிய கொரோனா பெருந்தொற்றால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொற்று பாதிப்பு தொடர்ந்து குறையாத நிலையில் ஒரு வருடத்திற்கும் மேலாக தினசரி வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவும், அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் நடைபெற்று வந்தது. அதனால் அரசு பள்ளிகளில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தது. இந்த நேரத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசின் முயற்சியால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.

அதனால் ஆசிரியர் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. குறிப்பாக அரசு மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப போதிய ஆசிரியர்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டது. அதனால் உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுக்கு கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது.

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசை வலியுறுத்தியுள்ளார். தற்போது தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு 50 லிருந்து 58 ஆக அதிகரிக்க வேண்டும். மேலும், ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 58 ஆக குறைக்க வேண்டும் என்ற ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமன தேர்வு இல்லாமல் பணியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை வழங்கியுள்ளார்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...