வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
📋பல மில்லியன் ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த டைனோசரஸ் விலங்கின்
முட்டைகள் தமிழகத்தில் கிடைக்கப்பட்டுள்ள இடம் - அரியலூர் பகுதியில்
📋 தமிழ் நாட்டில் அகழ்வாராய்ச்சி நடந்துள்ள இடம்
திருநெல்வேலி மாவட்டம் - ஆதிச்ச நல்லூரில்
📋2004-ல் ஆதிச்ச நல்லூர் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருள் 160 - க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள்
📋பழங்கால மக்களின் வாழ்வியல் பற்றி அறிந்துகொள்ள..................எழுதப்பட்ட ஆதாரங்களும் பழங்கால பொருட்களும் துணை புரிகின்றன
📋 நம் முன்னோர் வாழ்ந்த மக்கள் பற்றிய தகவல்களை ஆதாரங்களுடன் தொகுத்தக் காலவரிசைப்படி கூறுவதை ................... என்கிறோம் - வரலாறு
📋எழுதப்பட்ட ஆதாரங்களுக்கு (எ.கா) - இலக்கியம், வரலாற்றுக்குறிப்புகள் ,கல்வெட்டுகள் ,செப்பு பட்டையங்கள், ஓலைச்சுவடிகள்
📋வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைப்பற்றி அறிய உதவும் ஆதாரங்கள் : சார்ந்த பொருட்கள்,சிதைவுகள், கற்கள், மரங்கள், விலங்கு கொம்புகள் எலும்புகள், கற்கருவிகள், மண்டை ஓடுகள் முதலியன
📋பழைய கற்காலம் கி.மு.10,000 ஆண்டுகட்கு முற்பட்ட காலம்
புதிய கற்காலம் என்பது கி.மு.10000 - கி.மு 6000 வரையிலான காலம்
செம்பு கற்காலம் - கி.மு. 3000 - கி.மு.1500 வரை
இரும்பு காலம் என்பது கி.மு. 1500 - கி.மு. 600 வரையிலான காலம்
📋ஆதிமனிதன் பயன்படுத்திய கற்கருவிகளைக்கொண்டு கற்காலத்தை 2 வகையாகப் பிரிக்கலாம்.
1. பழைய கற்காலம்
2. புதிய கற்காலம்
📋பழைய கற்கால மனிதன் ஒரே இடத்தில் நிலையாகத் தங்கி வாழவில்லை. காடுகளில் அங்கும் இங்கும் வாழ்ந்தவன், மரப்பொந்துகளிலும், குகைகளிலும் வாழ்ந்தவன்,சிக்கி முக்கிகற்களைப் பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கினான்.
ஆதி மனிதன் எவற்றைக் கண்டு பயந்தான் - இடி, மின்னல்
ஆதிமனிதன் எவற்றை வணங்கினான் - இடி,மின்னல்
📋ஆதி மனிதன் குளிர், வெப்பம்,மழையிலிருந்து காத்துக்கொள்ள இலைகள், தழைகள்,மரப்பட்டைகள், விலங்குகளின் தோல்களால் ஆன ஆடைகளைப் பயன்படுத்தினான்.
📋கருவிகளாகப் பயன்படுத்தியவை - கரடு முரடான கற்கள், மரக்கிளைகள், எலும்புகள்,விலங்குகளின் கொம்புகள்
📋ஆதி மனிதனின் உணவுப்பொருள் -காடுகளில் கிடைத்த காய்கள், கனிகள், கிழங்குகள், விலங்குகளின் இறைச்சி
📋பூமி தோன்றிய ஆண்டு சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு
புவியில் மனிதன் தோன்றிய ஆண்டு சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்
புவியில் வேளாண்மை தோன்றிய காலம் சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்
புவியில் நகரங்கள் தோன்றிய காலம் சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன்
தி.மு. என்றால் திருவள்ளுவருக்கு முன்
தி.பி. என்றால் திருவள்ளுவருக்கு பின்
📋ஆதிமனிதன் உணவு சேமித்திருப்பானா? ஆம் காடுகளில் சேமித்தான், காய், கனி,கிழங்குகள், வேட்டையாடிய விலங்குகளை உணவாக சேமித்தான்
📋ஆதிமனிதன் விலங்குகளை வேட்டையாட -கற்கள், எலும்புகள்,மரக்கொம்புகள்,விலங்குகளின் கொம்புகள் ஆகியவற்றை கருவியாகப் பயன்படுத்தினான்
📋பண்டைய காலத்தில் பெண்களும் வேட்டையாடினர் என்பதற்கு சான்று.
மத்தியபிரதேசம் பிம்பேட்கா குகையில் காணப்படும் ஒரு பெண் அம்பு விடுவது போன்ற ஓவியம்
📋 உணவுக்காக ஆதிமனிதன் காட்டு விலங்குகளை வேட்டையாடினான்
📋 இந்தியாவில் பழைய கற்கால கருவிகள் கிடைக்கப்பெற்றுள்ள இடங்கள்
மத்தியப் பிரதேசம் -சோன் ஆற்றுப்படுகை, பிம்பேட்கா, மகேஸ்வரா
இராஜஸ்தான் -பாயும் லூனி ஆற்றுச்சமவெளி
கர்நாடகம்-பாகல்கோட்
ஆந்திரப்பிரதேசம்-கர்னூல் குகைகள்,ரேணிகுண்டா
தமிழ்நாடு-வடமதுரை, அத்திரம்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர்
📋 பழைய கற்கால மனிதன்- உணவைத்தேடி, வேட்டையாடி உண்டான்.
📋 புதிய கற்கால மனிதன்- உணவைத் தானே உற்பத்தி செய்தான், பயிர் தொழில் செய்தான்.
📋 வீட்டில் விலங்குகளை பரிவு காட்டி வளர்த்தான் - ஆடு, மாடு, கோழி, நாய்
ஆதி மனிதன் முதலில் பழக்கிய விலங்கு - நாய்
📋வேட்டையாடும்போது ஆதி மனிதனுக்கு உதவிய விலங்கு -நாய்
📋மனித நாகரிக வளர்ச்சியின் காலம் என்பது - புதிய கற்காலம்
📋புதிய கற்கால மனிதன் - செதுக்கப்பட்ட நயமான,கூர்மையான கற்கருவிகளைப் பயன்படுத்தினான்
📋புதிய கற்காலத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றம் - உணவு உற்பத்தி
📋சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது - புதிய கற்காலத்தில்
📋சக்கரம் கண்டுபிடிப்பின் பயன் - பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் சென்றான்.
📋புதிய கற்கால மனிதன் சக்கரத்தைக்கொண்டு - மண்பாண்டம் செய்தான்
📋புதிய கற்கால கருவிகள் கிடைத்த இடங்கள் - திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை, திருச்சி,தான்றிக்குடி(கொடைக்கானல் மலை)
📋பழைய கற்கால கருவிகள் கிடைத்த இடங்கள் - பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளுர்
📋புதிய கற்கால மனிதன் - மண் குடிசைகளால் ஆன குடியிருப்புகளை அமைத்து கூட்டமாக வாழ்ந்தான்.
📋குடிசைகளின் வடிவமைப்பு - வட்டம், நீள் வட்டம்
📋புதிய கற்கால மண்பாண்டங்கள் தமிழகத்தில் கிடைத்துள்ள இடங்கள் - திருநெல்வேலி,சேலம், புதுக்கோட்டை,திருச்சிராப்பள்ளி
📋 இறந்தோரை புதைக்கும் வழக்கம் - புதிய கற்காலத்தில் கடைபிடிக்கப்பட்டது
📋 ஆதி மனிதன் முதன்முதலில் பயன்படுத்திய உலோகம் - செம்பு
📋 புதிய கற்கால முடிவில் ஆதி மனிதன் அறிந்த உலோகம் - செம்பு
📋 மட்பாண்டங்களின் மேல் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டது - செம்பு காலத்தில் இவை வரிக்கோலங்களாக அமைந்திருந்தன
📋ஹரப்பா நகர நாகரிகம் செம்புக்காலத்தை ஒத்தது
📋செம்பினால் செய்த கருவிகளை உபயோகித்த காலம் - செம்பு காலம்
📋இரும்பினால் கருவிகள் செய்த காலம் - இரும்பு காலம்
📋இரும்பு காலத்தில் வீட்டுச்சாமான்களும், பயிர்தொழில் கருவிகளும் இரும்பினால் செய்யப்பட்டது
📋 உலோகத்தை உருக்கி கருவிகள் செய்ய அறிந்த காலம் - இரும்பு காலம்
📋கற்பனைத்திறன் காணப்பட்ட காலம் - இரும்பு காலம்
📋வேத கால நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது - இரும்பு காலம்
📋இரும்பும் 10 குரோமியம் கலந்த கலவை - சில்வர்
📋செம்பும் 10 வெள்ளீயமும் கலந்த கலவை -வெண்கலம்
📋செம்பும் 10 துத்தநாகமும் கலந்த கலவை - பித்தளை
📋இரும்பும் 10 மாங்கனீசும் கலந்த கலவை - எக்கு
📋வரலாற்றுக்கு முந்திய காலம் என்பது - எழுத்து ஆதாரங்கள் கிடைக்காத காலம்
📋பழைய கற்கால மக்கள் ஆடையாக அணிந்தவை - இலை, மரப்பட்டை,விலங்குத் தோல்
📋ஆதி மனிதன் இயற்கையை அண்டி வாழ்ந்தான்
📋சிக்கி முக்கிக் கற்களைக் பயன்படுத்தி தீ உண்டாக்கியவன் - பழைய கற்கால மனிதன்
📋தொல்பழங்காலம் என்பது பழங்காலத்திற்கு முந்திய காலம்
📋 பொருத்துக:
அ. தமிழ்நாடு -1. பாகல்கோட்
ஆ.ஆந்திரபிரதேசம்-2.அத்திரம்பாக்கம்
இ.மத்தியபிரதேசம் -3. கர்னூல்
ஈ. கர்நாடகம்-4. லூனி ஆற்றுச்சமவெளி
உ. இராஜஸ்தான் -5. பிம்பேட்கா
விடை: அ) 2 ஆ) 3 இ) 5 ஈ)1 உ)4
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.