தமிழகத்தில் மார்ச் 15ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

தமிழகத்தில் மார்ச் 15ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!



திருவாரூர் மாவட்டத்தில் பங்குனி உத்திரத் திருவிழா விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் வருகிற 15ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.


உள்ளூர் விடுமுறை:

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தியாகராஜ சுவாமி கோவிலில் ஆழித்தேர் விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இக்கோவிலானது சைவ சமய மரபில் பெரிய கோவில் என்று போற்றப்படுகிறது. இங்கு நடைபெறும் ஆழித்தேரோட்டம் மற்ற ஊர் தேர்களை போல அறுகோணம், வட்ட வடிவமைப்பு போன்ற அமைப்பில் இல்லாமல் மாறாக பட்டை வடிவ அமைப்பினை கொண்டதாக உள்ளது. தேரோட்டத்தினை முன்னிட்டு கோவிலின் தேவாசிரிய மண்டபத்தில் இருந்து தியாகராஜர் புறப்படுவார்.


இதனை தொடர்ந்து அஜபா நடனத்துடன் நகர்வலமாக வந்து திருத்தேரில் அமர்த்தப்படுகிறார். இத்தேரை தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 5 தேர்கள் ராஜ விதிகளில் வலம் வருகின்றன. இத்தேரோட்ட விழாவை காண வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இந்த ஆழித்தேர் விழா இந்த ஆண்டு வருகிற மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளது.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொடியேற்றம் நடைபெற்றது. இவ்விழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற மார்ச் 15ம் தேதி அன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அழித்தேரோட்ட விழாவில் மிகவும் மகிழ்ச்சியாக கலந்து கொள்வார்கள்

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...